தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தது ஆஸ்திரேலியா… மிதாலி ராஜ் அணி ரெடி

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
இந்திய மகளிர் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மோத உள்ளது- வீடியோ

டெல்லி: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை துவம்சம் செய்து திரும்பியுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-1 என வென்றது. இதன் மூலம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

indian team for aus tour

அதைத் தொடர்ந்து, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா அணி, இந்தியா வருகிறது. மார்ச் 12ம் தேதி துவங்கும் இந்தத் தொடரில், இரு அணிகளும் மூன்று ஒருதினப் போட்டிகளில் விளையாட உள்ளன.

இதற்கான கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக, சீனியரான ஜூவான் கோஸ்வாமி இந்தத் தொடரில் விளையாட விளையாடவில்லை.

வதோதராவில், மார்ச் 12, 15 மற்றும் 18ல் நடக்கும் இந்தத் தொடருக்குப் பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மும்பையில் நடக்க உள்ளது.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய மகளிர் அணி:

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணைக் கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, பூனம் ராவத், ஜெமிமா ரோட்ரிகுஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், , சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஸ்த், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெயிக்வாட், ஷிகா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா வாஸ்த்ராகர், தீப்தி சர்மா.

Story first published: Wednesday, February 28, 2018, 14:25 [IST]
Other articles published on Feb 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற