For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட்கள்.... இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

இங்கிலாந்து டெஸ்ட்... பந்த், தினேஷ் கார்த்திக் தேர்வு Ind Test | Pant, Dinesh karthick selected

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மற்றும் அனுபவ வீரரான தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. முதலில் நடந்த மூன்று டி-20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என வென்றது. அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.

அடுத்தது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. இதில் முதலில் நடக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டனில் ஆகஸ்ட் 1 முதல் 5 வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 9 முதல் 13 வரை நடக்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிரென்ட்பிரிட்ஜில் ஆகஸ்ட் 18 முதல் 22 வரை நடக்க உள்ளது.

பந்த்துக்கு வாய்ப்பு

பந்த்துக்கு வாய்ப்பு

மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், இளம் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த பந்த், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு

ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு

மனைவி அளித்த பாலியல் புகார்களில் சிக்கிய முகமது ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் விளையாடிய அவர் யோ-யோ தேர்வில் உடல் தகுதியை நிரூபித்ததால் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

புவிக்கு காயம்

புவிக்கு காயம்

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் முதல் மூன்று போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறினால், 2வது போட்டியில் அவர் பங்கேற்பார். காயம் காரணமாக விக்கெட் கீப்பர் சாகா விலகியதால், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். ஒருதினப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவும் அணியில் உள்ளார். யுஸ்வேந்திர சாஹல் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணியின் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், கேஎல் ராகுல், முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா, அஜங்யா ரஹானே (துணை கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டயா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகுர்.

Story first published: Wednesday, July 18, 2018, 16:22 [IST]
Other articles published on Jul 18, 2018
English summary
India announced test team for the matches against england.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X