நான் ரன் குவிக்க காரணம் இதுதான்.. மிதாலி சொல்லும் சீக்ரெட்

Posted By:

டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்திற்கான கருத்தரங்கில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் சச்சின் பற்றி மித்தாலி ராஜ் புகழ்ச்சியாக பேசினார். சச்சின் கூறிய வார்த்தைகள்தான் அவருக்கு தன்னைம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் சச்சின் கொடுத்த கிப்ட் பேட்தான் தான் போட்டியில் சிறப்பாக செயல்பட காரணம் எனவும் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

 கலக்கும் கேப்டன் மிதாலி ராஜ்

கலக்கும் கேப்டன் மிதாலி ராஜ்

பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணிக்கு போதிய அளவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆண்கள் அணிக்கு கொடுக்கப்படும் பெயரும், புகழும் பெண்கள் அணிக்கு கொடுக்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் தனித்து தெரியும் முக்கியமான பிளேயர் மிதாலி ராஜ் ஆவார். இந்திய பெண்கள் அணியின் கேப்டனான இவர் ஆண்களுக்கு இணையாக சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது இவர் தன்னைப் பற்றி சுயசரிதை எழுதும் பணியில் செயல்பட்டு வருகிறார்.

 சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு

சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு

இந்த நிலையில் நேற்று யூனுஸ்கோ நடத்திய சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கில் மிதாலி ராஜ் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் பெண் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டுனர். இதில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும், விளையாட்டில் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டது.

 நம்பிக்கையாக பேசிய சச்சின்

நம்பிக்கையாக பேசிய சச்சின்

மேடையில் பேசிக்கொண்டிருந்த மிதாலி ராஜ் பெண் குழந்தைகளின் கல்விமுறை, விளையாட்டில் அவர்களின் பங்களிப்பு குறித்து பல விஷயங்களைச் தொடர்சியாக பேசினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சச்சின் டெண்டுல்கர் பற்றியும் சில வார்த்தைகள் பேசினார். அதில் அவர் ''சச்சின் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் தான் எனக்கு பல முறை உதவி இருக்கிறது. நான் 6000 ரங்களைக் கடந்த போது சச்சின் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் என்னை பாராட்டியது தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறது" என்று கூறினார்.

 பேட் கிஃப்ட் செய்த சச்சின்

பேட் கிஃப்ட் செய்த சச்சின்

இந்த நிலையில் அவர் பெண்கள் கிரிக்கெட்டின் வேர்ல்ட் கப் பைனலுக்கு சென்றதன் ரகசியம் பற்றி பேசினார் , "நான் 6000 ரன்கள் எடுத்த போது சச்சின் டெண்டுகள் எனக்கு ஒரு பேட் கிஃப்ட் செய்திருந்தார். அந்த பேட்டை வைத்துதான் நான் அதற்குப் பின் பல ரன்கள் குவித்தேன் அதன் மூலம் தான் நான் உலகின் அதிக ரன்கள் எடுத்த பெண் கிரிக்கெட் வீரராக இருக்கிறேன். அது எனக்கு மிகவும் லக்கியான் பேட்" என்று கூறினார்.

Story first published: Thursday, October 12, 2017, 11:13 [IST]
Other articles published on Oct 12, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற