For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லுக்கு 10 வயசு.. எதிரணி வீரர்களை மிரள வைத்த டாப் 10 பவுலர்கள் இவர்கள்தான்!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பெஸ்ட் பவுலிங் பட்டியலில் டாப்பில் இருப்பது பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சொகைல் தன்வீரின் ஸ்பெல்தான்.

By Veera Kumar

சென்னை: 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் திருவிழா தற்போது 10வயதை தொட்டுள்ளது. இது சிக்சர், பவுண்டரிகள் பறக்கும் பேட்ஸ்மேன்களுக்கான ரத்த பூமி என அறியப்பட்டிருந்தாலும், அசால்ட்டாக பவுலர்களும் தங்கள் திறமையை நிரூபித்து எதிரணிகளை சுருளச் செய்தது உண்டு.

அதிசயமான நிகழ்வுகள் இவை என்பது நவீன கால கிரிக்கெட் மாற்றங்களை உற்று கவனித்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி விளையாட்டு தொடரில் சாதித்த பத்து பெஸ்ட் பவுலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறோம். பத்தாண்டு கால ஐபிஎல் வரலாற்றில் இவர்களது பெயர்களும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கட்டும்.

பாகிஸ்தான் பவுலர்

பாகிஸ்தான் பவுலர்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பெஸ்ட் பவுலிங் பட்டியலில் டாப்பில் இருப்பது இவரது பந்து வீச்சுதான். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சொகைல் தன்வீர் 2008ம் ஆண்டு அதாவது ஐபிஎல் முதல் சீசனிலேயே இச்சாதனையை செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக மே 4ம் தேதி நடந்த ஒரு போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆடம் ஜம்பா

ஆடம் ஜம்பா

இதேபோன்ற மற்றொரு சாதனை கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அரங்கேறியது. ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இந்த சாதனையை செய்தார். ரைசிங் புனஏ சூப்பர்ஜியான்ட் அணிக்காக ஆடிய ஜம்பா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மே 10ம் தேதி நடந்த போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். சொகைல் தன்வீருக்கு ஈராக, 6 விக்கெட்டை வீழ்த்தியபோதிலும், சற்றே ரன் அதிகம் விட்டுக்கொடுத்ததால் இப்பட்டியலில் இவருக்கு 2வது இடம்.

கும்பளே கலக்கல்

கும்பளே கலக்கல்

2009ம் ஆண்டு சீசநில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் அனில்கும்ப்ளே, ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக 3.1 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அதகளம் செய்தார்.

இஷாந்தும் இளைத்தவர் இல்லை

இஷாந்தும் இளைத்தவர் இல்லை

2011ல் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் இஷாந்த் ஷர்மா, கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மலிங்கா மடக்கல்

மலிங்கா மடக்கல்

இஷாந்த் ஷர்மாவைவிட 1 ரன் அதிகம் விட்டுக்கொடுத்து, அதாவது 13 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் லத்திஷ் மலிங்கா. மும்பை இந்தியன்சுக்காக ஆடும் இவர், டெல்லி டேர்டெவில்சுக்கு எதிராக 2011ல் இவ்வாறு அசத்தினார்.

ஜடேஜா தடாலடி

ஜடேஜா தடாலடி

ரவீந்திர ஜடேஜாவுக்கும் லேசுப்பட்டவர் இல்லை. சிஎஸ்கே அணிக்காக, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர். 2012ல் இப்போட்டி விசாகபட்டிணத்தில் நடைபெற்றது.

பலே பால்க்னர்

பலே பால்க்னர்

ராஜஸ்தான் ராயல்சுக்காக ஆடிய ஜேம்ஸ் பால்க்னர், 2013ல் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகக்கு எதிராக 16 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அமித் மிஸ்ரா அசத்தல்

அமித் மிஸ்ரா அசத்தல்

2008ம் ஆண்டு ஐபிஎல் சீசனின்போது டெல்லி அணி வீரர் அமித் மிஸ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 17 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆன்ட்ரு டை அமோகம்

ஆன்ட்ரு டை அமோகம்

நடப்பு சீசனில், குஜராத் லயன்ஸ் வீரர் ஆன்ட்ரு டை, ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட் அணிக்கு எதிராக 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பல்லே, பல்லே

பல்லே, பல்லே

2011 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன்சிங் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Wednesday, April 19, 2017, 15:01 [IST]
Other articles published on Apr 19, 2017
English summary
The Indian Premier League (IPL) is undoubtedly the biggest cricket extravaganza in the country which has entered its 10th edition this time.IPL Special Site; Schedule; Points Table; PhotosStarting its journey in 2008, IPL became an instant success and very popular event among the Indian masses. Fans welcomed it with open arms and flocked the stadiums in thousands to cheer for their favourite teams and players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X