For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையிடம் பஞ்சரான பஞ்சாப் இன்று ஹைதராபாத்துடன் மோதல்.. மேக்ஸ்வெல், சேவாக் சீறுவார்களா?

By Veera Kumar

மொகாலி: எட்டாவது ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரையிலும் இரு அணிகளும் ஆறு ஆட்டங்களில் பங்கேற்று நான்கில் தோல்வி, இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் பின்தங்கியுள்ளது.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் என்ற இலக்கை சேஸ் வேண்டிய கட்டாயத்தில் 95 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தோல்வியடைந்தது. இதுவரையிலான எட்டு தொடர்களில் பஞ்சாப் அணி பதிவு செய்த இரண்டாவது குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

வீரர்களுக்கு பஞ்சமில்லை

வீரர்களுக்கு பஞ்சமில்லை

இத்தனைக்கும் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். வீரேந்திர சேவாக், டேவிட் மில்லர், ஷான் மார்ஸ், கிளென் மேக்ஸ்வெல் என ஒரு பட்டாளமே உள்ளது. ஆனால், இவர்கள் எல்லாம் சோபிக்க தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்.

பந்து வீச்சும் மோசம்

பந்து வீச்சும் மோசம்

பந்துவீச்சிலும் பஞ்சாப் ஜொலிக்கவில்லை. இத்தனைக்கும் வேகத்துக்குப் பெயர்போன ஆஸ்திரேலியாவின் மிச்செல் ஜான்சன், பந்துவீச்சில் மிரட்டவில்லை. அவர் தொடர்ச்சியான ஆட்டத்தால் சோர்வடைந்து ஆட்டத்திறனை இழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஹைதராபாத் பேட்டிங் வீக்

ஹைதராபாத் பேட்டிங் வீக்

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், டேவிட் வார்னரை மட்டுமே நம்பியுள்ளது. மிடில் ஆர்டரில் ஸ்திரமான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. முந்தைய ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆட்டத்தில் டேல் ஸ்டெயின், டிரென்ட் போல்ட் ஆகிய இருவரது பந்துவீச்சும் பரவாயில்லை. இருந்தாலும் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஆக்ரோஷம் இன்னும் வெளிவரவில்லை.

எங்கே எப்போது?

எங்கே எப்போது?

மொஹாலி பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஏப்ரல் 27ம்தேதியான இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இது பஞ்சாப் அணிக்கு சொந்த ஊர் மைதானமாகும்.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில், தமிழ், தெலுங்கு, சோனி ஆத் சேனலில் வங்காளம், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலம், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும் கமெண்டரியுடன், நேரடி ஒளிபரப்பை காணலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

பஞ்சாப் அணி- ஷான் மார்ஷ், டேவிட் மில்லர், ஜார்ஜ் பெய்லி, சந்தீப் ஷர்மா.

ஹைதராபாத்-டேவிட் வார்னர், ஷிகர் தவான், டேல் ஸ்டெயின், டிரென்ட் பவுல்ட்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில், பஞ்சாப் இருமுறையும், ஹைதராபாத் இருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

ஹைதராபாத் அணி 2 வெற்றி 4 தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 8வது இடத்திலும் உள்ளன.

Story first published: Monday, April 27, 2015, 15:24 [IST]
Other articles published on Apr 27, 2015
English summary
Kings XI Punjab (KXIP) and Sunrisers Hyderabad (SRH) are in same situation. Both have 2 wins and 4 losses. The two will face off in tonight's Match 27 of Indian Premier League 2015 (IPL 8).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X