For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராவோ பட்டையைக் கிளப்ப.. முதல் வெற்றியை முத்திரையுடன் பதித்த குஜராத் லயன்ஸ்

மொஹாலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாஜி வீரர்கள் அடங்கிய முதல் படை டோணி தலைமையில் மும்பை இந்தியன்ஸ் புரட்டி எடுத்த நிலையில் 2வது படை சுரேஷ் ரெய்னா தலைமையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பந்தாடியது. ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியில் பிராவோ பிரமாதாமாக ஆடி.. அல்ல அல்ல.. பட்டையைக் கிளப்பி ஆடியதால் லயன்ஸ் அணிக்கு அட்டகாசமான முதல் வெற்றி கிடைத்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாதமான முறையில் நேற்று பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்து அசத்தினார் பிராவோ. ஐபிஎல் போட்டிகளில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுதான். மறுபக்கம் குஜராத் லயன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார்.

இறுதியில் குஜராத் லயன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து தனது முதல் வெற்றியைப் பதித்தது. முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் ஆடும் குஜராத் லயன்ஸுக்கு இது முதல் வெற்றியாகும்.

முரளி விஜய் - மனன் வோரா

முரளி விஜய் - மனன் வோரா

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைக் குவித்தது. முரளி விஜய் 42 ரன்களைக் குவிக்க, மனன் வோரா 38 ரன்களை விளாசினார். இருவரும் சேர்ந்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

காலி செய்த ஜடேஜா

காலி செய்த ஜடேஜா

ஆனால் இவர்களை ஜடேஜா அடுத்தடுத்துக் காலி செய்து வெளியேற்றினார். பின்னர் வந்து சேர்ந்தார் பிராவோ. டேவிட் மில்லர், மேக்ஸ்வெல் ஆகியோரை 12வது ஓவரின்போது 3 பந்துகள் வித்தியாசத்தில் சாய்த்ததில் பஞ்சாப் அணி நிலை குலைந்து போனது.

கை கொடுத்த ஸ்டாய்னிஸ் - சாஹா

கை கொடுத்த ஸ்டாய்னிஸ் - சாஹா

இருப்பினும் கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், விருத்திமான் சாஹா ஆகியோர் கை கொடுத்து ரன் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. இல்லாவிட்டால் அந்த அணியால் 150 ரன்களைக் கூட தாண்டியிருக்க முடியாது.

ஏமாற்றிய மெக்கல்லம்

ஏமாற்றிய மெக்கல்லம்

இதையடுத்து சற்றே கடினமான இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கிய குஜராத் லயன்ஸுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. மெக்கல்லம் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சுரேஷ் ரெய்னா 20 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார்.

அதிரடியாக ஆடிய பின்ச்

அதிரடியாக ஆடிய பின்ச்

மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சற்றே நிலைத்தும், பின்னர் அதிரடிக்கு மாறியும் குஜராத் அணியின் நம்பிக்கையை தக்க வைத்தார். சிறப்பாக ஆடிய அவர் 78 ரன்களைக் குவித்தார். அவரும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து 65 ரன்களைக் குவித்தார்.

சூப்பர் தினேஷ்

சூப்பர் தினேஷ்

தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தார். பின்ச்சும், தினேஷும் ஆடிய ஆட்டம் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இருவரும் இணைந்து பஞ்சாப் பவுலர்களை பதம் பார்த்து விட்டனர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல்

கடைசி வரை ஆட்டமிழக்காமல்

இடையில் ஜடேஜா , பிராவோ ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்து சிக்கலை ஏற்படுத்தினர். ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

Story first published: Tuesday, April 12, 2016, 12:40 [IST]
Other articles published on Apr 12, 2016
English summary
Dwyane Bravo recorded his best IPL figures with a four-wicket haul before Aaron Finch smashed 74 runs off 47 balls as Gujarat Lions thumped hosts Kings XI Punjab by five wickets to make a winning entry into the Indian Premier League match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X