For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல் 2016: பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

By Karthikeyan

பெங்களூர்: ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரூ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கோஹ்லி 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெங்களூர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற கெயில் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

IPL 2016: MI to victory over RCB

இதையடுத்து டி.வில்லியர்ஸும், கே.எல்.ராகுலும் இணைந்தனர். டி.வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன் 15 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார்.

பெங்களூர் அணியில் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். இதேபோல மற்றொரு இளம் வீரர் சச்சின் பேசி 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 1 ரன்னில் அவுட் ஆகினார். இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும், ராயுடும் ஜோடி சேர்ந்தனர். ரோகித் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரனாவும் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 44 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவிரில் மும்பையின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைபட்டது. பொல்லார்டும், பட்லரும் ஆட்டத்தை தனதாக்கிக் கொண்டனர். 17 வது ஓவரில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசினார் பொல்லார்டு. பட்லரும் அதிரடி காட்ட, 18.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொல்லார்டு 19 பந்துகளில் 35 ரன்களும், பட்லர் 11 பந்துகளில் 29 ரன்களும் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் கர்னல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Thursday, May 12, 2016, 1:34 [IST]
Other articles published on May 12, 2016
English summary
IPL 2016: Pollard, Buttler's late assault takes MI to victory over RCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X