For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பதற்றத்தோடு இறங்கிய என்னை புயலாக மாற்றிய அந்த போன் கால்... மனம் திறந்த டிவில்லியர்ஸ்

By Veera Kumar

இந்தூர்: நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையை பொழிந்து தனது மீள் வருகையை பறைசாற்றிய டி வில்லியர்ஸ், இந்த அதிரடிக்கு காரணம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியம் நேற்று டிவில்லியர்ஸ் எனும் இடி முழக்கத்தை சந்தித்தது. முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்து வந்த இந்த தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி பேட்ஸ்மேன், நேற்று இவ்வாண்டு ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் காலடி எடுத்து வைத்தார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் முதுகெலும்பான டிவில்லியர்ஸ், ஃபார்முக்கு வர சில போட்டிகளாவது தேவைப்படும் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று நடந்ததோ வேறு.

என்னா அடி

என்னா அடி

46 பந்துகளை மட்டுமே சந்தித்த டிவில்லியர்ஸ் 89 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்சர்கள் அடங்கும். போனால் போகட்டும் என 3 பவுண்டரிகளை தட்டி விட்டார் என்றுதான் கூற வேண்டும். 102 மீட்டர் தூரத்திற்கு பறந்தன சில சிக்சர்கள். இருமுறை பந்துகளை மைதானத்திற்கு வெளியே சென்றுதான் எடுத்து வர வேண்டியதாயிற்று.

காரணம் என்ன

காரணம் என்ன

ஓய்வில் சேர்த்து வைத்த வேகத்தையெல்லாம் காட்டி, இந்த கொல குத்து, குத்த என்ன காரணம் என்பது குறித்துதான் ரசிகர்கள் ஹாட்டாக பேசிக்கொண்டிருந்தனர். ஆர்வம் தாங்காமல் டிவில்லியர்சிடமே டிவி வர்ணனையாளர்கள் இதுகுறித்து கேட்டனர்.

மனம் திறந்தார்

மனம் திறந்தார்

டிவில்லியர்ஸ் ஃபீல்டிங் செய்ய வந்தபோது அவரிடம் மைக்ரோபோன் வாயிலாக வர்ணனையாளர்கள் பேசினர். மஞ்சரேக்கர் கூறுகையில், காயத்திலிருந்து வந்த வீரர்கள் முதலில் பதற்றப்படுவார்கள். நீங்கள் பட்டையை கிளப்பிவிட்டீர்களே என்று கேட்டார்.

எல்லாம் 'மன பிராந்தி'

எல்லாம் 'மன பிராந்தி'

இதற்கு பதிலளித்த டி வில்லியர்ஸ், எனது ஆட்டத்தை பார்த்து நானே வியந்தேன் என்றுதான் கூற வேண்டும். எல்லாம் மனதில்தான் உள்ளது. ஒரே நாள் இரவில் யாரும் மோசமான வீரராக மாறிவிட முடியாது. நம்மீது நமக்கே நம்பிக்கை இல்லாவிட்டால்தான் பதற்றம் ஏற்படும். சில வாரங்களாக கிரிக்கெட் விளையாடாததால் நானும் என்மீது சந்தேகத்தோடுதான் இருந்தேன். இதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.

மனைவிக்கு போன்

மனைவிக்கு போன்

இந்த சந்தேகம் எப்படி தீர்ந்தது என்பது குறித்தும் டிவில்லியர்ஸ் பதிலளித்தார். நேற்று போட்டிக்கு முன்பாக நான் எனது மனைவிக்கு (Danielle) போன் செய்தேன். நான் சிறப்பாக ஆட முடியுமா என்ற சந்தேகம் உள்ளதாக கூறினேன். அப்போது எனது மனைவி எனது மகன் அருகே படுத்திருந்தார். எனவே மகன் தூக்கம் கலையக் கூடாது என்பதற்காக சில நிமிடங்கள் கழித்து போன் செய்வதாக கூறினார்.

நானே வாரேங்க

இதன்பிறகு எனது மனைவியே எனக்கு கால் செய்தார். மிகவும் சப்போர்டிவாக பேசினார். அமைதியாக மனதை வைத்திருக்ககும்படி கூறினார். மேலும், ஏப்ரல் 11ம் தேதி, தானும் இந்தியா வருவதாக உறுதியளித்தார். இதனால் எனக்கு புது உற்சாகம் பிறந்தது. இதன்பிறகு மனது அமைதி பெற்று, அடி பட்டையை கிளப்பிவிட்டேன் என்றார் டிவில்லியர்ஸ்.

மனைவி அமைவதெல்லாம்..

பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் அணி எதிர்கொள்ள உள்ளது. அப்போது மனைவி அருகாமையில் இருக்கப்போவதால், மீண்டும் டிவில்லியர்ஸ் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, April 11, 2017, 12:45 [IST]
Other articles published on Apr 11, 2017
English summary
Royal Challengers Bangalore's (RCB) batsman AB de Villiers was inspired by a phone call to construct a super knock of 89 not out against Kings XI Punjab in IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X