For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று எலிமினேட்டர்.. கொல்கத்தா, ஹைதராபாத் மோதல்.. தோற்றால் அப்படியே பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்!

By Veera Kumar

பெங்களூர்: 10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ், 4வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்சுடன் விளையாடும். அதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

2012, 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி கொல்கத்தா. நடப்பு சீசனில் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் 4வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. தனது கடைசி 7 லீக் ஆட்டங்களில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது கொல்கத்தா அணி. கடைசி லீக்கில் 9 ரன் வித்தியாசத்தில் வலுவான மும்பை அணியை வீழ்த்தி இருந்தது.

பேட்டிங்கில் இவர்கள்தான்

பேட்டிங்கில் இவர்கள்தான்

கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரின், கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கின் முக்கிய பங்காளிகள். கிறிஸ்வோக்ஸ், உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

நடப்பு சாம்பியன்

நடப்பு சாம்பியன்

நடப்பு சாம்பியனான ஹைதராபாத் அணி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 17 புள்ளிகள் எடுத்து 3வது இடம் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளை முறையே 7 விக்கெட் மற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

வார்னர் பலம்

வார்னர் பலம்

ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான், யுவராஜ்சிங் ஆகியோர் வலுவாக உள்ளனர். யுவராஜ் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா என்பது சந்தேகத்தில் உள்ளது. புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா எஞ்சிய ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்குமார் அசத்தல்

புவனேஸ்வர்குமார் அசத்தல்

ஹைதராபாத் அணியில் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் அதிகபட்சமாக 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அச்சுறுத்தி வருகிறார். ஆப்கன் ஸ்பின்னர் ரஷித் கான் 17 விக்கெட்டுகள், சித்தார்த் கவுல், முகமது சிராஜ் ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.

கொல்கத்தா ஆதிக்கம்

கொல்கத்தா ஆதிக்கம்

ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஹைதராபாத் அணி 4 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களுக்கிடையேயான மோதலில் தலா ஒரு வெற்றி பெற்று இருக்கின்றன.

கடந்த வருடம்

கடந்த வருடம்

கடந்த ஆண்டு நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி, ஹைதராபாத்திடம்தான் மோதியது. அதில் கொல்கத்தா தோல்வி கண்டு நடையை கட்டியது. அந்த தோல்விக்கு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முயலும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Wednesday, May 17, 2017, 14:44 [IST]
Other articles published on May 17, 2017
English summary
Two-time champions Kolkata Knight Riders will be facing defending champions Sunrisers Hyderabad in the first eliminator match of the Indian Premier League (IPL) 2017 at M Chinnaswamy Stadium on Wednesday (May 17).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X