For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்.. தொடக்க விழா, போட்டிகளை டிவி இல்லாமலே பார்க்க முடியும், எப்படி தெரியுமா?

By Veera Kumar

ஹைதராபாத்: ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. கடந்த சீசன் ஐபிஎல் தொடரை 40 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டுகளித்த நிலையில் இந்த வருடம் எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது.

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடர் குறித்து அறிந்துகொள்ள சில விஷயங்கள்:

ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. டிவிக்கு பக்கத்தில் நீங்கள் இருக்க முடியாத சூழல் இருந்தால் கவலை வேண்டாம், ஹாட்ஸ்டார் உள்ளது.

ஆன்லைன்

டிவியில் பார்க்கும் நேரடி காட்சிகளைவிட 5 நிமிடம் தாமதமாகவே காட்சிகள் வரும் என்றபோதிலும், கிரிக்கெட்டை பார்க்க முடியவில்லை என்று குறைபடும் நிலையைவிட இது பெட்டர். செல்போன் ஆப் மற்றும் வெப்சைட்டுகள் மூலமாக ஹாட்ஸ்டார் நேரலை செய்ய உள்ளது. ஹோம்பேஜில் பார்க்க முடியாவிட்டால் ஸ்போர்ட்ஸ் பிரிவுக்கு சென்று பார்க்கலாம்.

8 தொடக்க விழாக்கள்

8 தொடக்க விழாக்கள்

இந்த வருடம் 8 அணிகளுமே தங்களது சொந்த ஊரில் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்தியபிறகு, போட்டி தொடங்கும். இதன்படி இன்று ஹைதராபாத், நாளை புனே, நாளை மறுநாள் குஜராத், 8ம் தேதி பஞ்சாப், அதே நாளில் பெங்களூர், 9ம் தேதி மும்பை, 13ம் தேதி கொல்கத்தா, 15ம் தேதி டெல்லி அணிகள் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், டைகர் ஷரோப், ஷ்ரதா கபூர், பிரனீதி சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் துவக்க விழா நிகழ்ச்ிசகளில் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது.

போட்டி நேரம்

போட்டி நேரம்

பகல் நேர போட்டிகள் மாலை 4 மணிக்கு தொடங்கும். இரவு 8 மணிக்கு இரவு போட்டிகள் தொடங்கும். முதலாவது ஐபிஎல் தொடர் முதலே இந்த நடைமுறைதான் உள்ளது. அதுவே தொடரும்.

Story first published: Wednesday, April 5, 2017, 13:12 [IST]
Other articles published on Apr 5, 2017
English summary
IPL 2017 will kick off on April 5, Wednesday- the 10th edition of the T20 extravaganza, where the Sunrisers Hyderabad team will defend the title it won last year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X