For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராயுடுவா? விஜய் ஷங்கரா?ன்னு சண்டை போட்டதெல்லாம் போதும்.. 2 பேருமே அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க!!

சென்னை : 2019 உலகக்கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியில் நான்காவது வரிசை பேட்ஸ்மேன் இடத்திற்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், தேர்வுக் குழு சர்வதேச அனுபவம் குறைந்த விஜய் ஷங்கரை அந்த இடத்திற்கு தேர்வு செய்து ஆச்சரியம் கொடுத்தது. ஏற்கனவே, அந்த இடத்தில் பேட்டிங் செய்து வந்த அம்பதி ராயுடு அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

IPL 2019 : Ambati Rayudu and Vijay Shankar both ends up with same performance

இதனால், ரசிகர்கள் அம்பதி ராயுடுவிற்கு ஆதரவாகவும், விஜய் ஷங்கருக்கு ஆதரவாகவும் கருத்து கூறி சமூக வலைதளங்களில் வாக்குவாதம் செய்து வந்தனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இருவருமே ஒரே ரன்களை எடுத்து, ஒரே மாதிரி படுமோசமாக பேட்டிங் செய்து சொதப்பியுள்ளனர்.

2019 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு வீரர்களும் 14 போட்டிகளில் பங்கேற்று 219 ரன்கள் குவித்துள்ளனர். இவர்களது சராசரி 19.90. இதில் அம்பதி ராயுடு ஒரு அரைசதம் அடித்துள்ளார். விஜய் ஷங்கர் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்துள்ளார். விஜய் ஷங்கரின் ஸ்ட்ரைக் ரேட் 120. அம்பதி ராயுடுவின் ஸ்ட்ரைக் ரேட் 90. ஆக, இரண்டு வீரர்களுமே ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பாருங்க... இந்த முறை இங்கிலாந்துக்கு தான் உலக கோப்பை..! கவாஸ்கர்... நீங்க இப்படி சொல்லலாமா? பாருங்க... இந்த முறை இங்கிலாந்துக்கு தான் உலக கோப்பை..! கவாஸ்கர்... நீங்க இப்படி சொல்லலாமா?

அப்புறம் எதுக்குப்பா யாரு நல்லா ஆடுவாங்கன்னு அடிச்சுக்குறீங்க? எப்படியும் உலகக்கோப்பையில் விஜய் ஷங்கருக்கு பெஞ்ச் தான் கிடைக்கும்னு ஏற்கனவே ஒரே பேச்சா கிடக்கு!!

Story first published: Monday, May 6, 2019, 18:35 [IST]
Other articles published on May 6, 2019
English summary
IPL 2019 : Ambati Rayudu and Vijay Shankar both ends up with same performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X