For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இல்லாம போயிட்டாரே.. நல்ல வாய்ப்பை விட்டுட்டீங்களே அம்பதி ராயுடு.. புலம்பும் ரசிகர்கள்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை.

தோனிக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டன் பதவி வகித்தார். அம்பதி ராயுடு விக்கெட் கீப்பிங் செய்தார். ராயுடு விக்கெட் கீப்பிங்கின் போது ஒரு எளிய விக்கெட் வாய்ப்பை தவறவிட்டார்.

ஹர்பஜன் சிங் ஓவர்

ஹர்பஜன் சிங் ஓவர்

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி ஒரு விக்கெட் இழந்து பேட்டிங் செய்து வந்தது. ஆறாவது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மும்பை வீரர் ஈவான் லீவிஸ் அடிக்க முயன்றார்.

அவுட் கேட்கவில்லை

அவுட் கேட்கவில்லை

அந்த பந்து விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு வசம் சென்றது. ஆனால், ரீப்ளேவில் பந்து லேசாக பேட்டில் எட்ஜ் ஆகி சென்றது தெரிந்தது. ஆனால், பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு என யாருமே அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை.

ராயுடு சொன்ன பதில்

ராயுடு சொன்ன பதில்

ரீப்ளே பார்த்த பின் ஹர்பஜன் சிங், ராயுடுவிடம் ஏன் அவுட் கேட்கவில்லை என கேட்டார். ஆனால், ராயுடு தனக்கு காதில் கேட்கவில்லை. வேண்டுமென்றால், ஸ்லிப்பில் நின்ற வாட்சனிடம் கேளுங்கள் என கூறினார்.

தோனி இருந்தால்..

தோனி இருந்தால்..

ஈவான் லீவிஸ் அப்போது 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அப்போது வாய்ப்பு பெற்ற அவர், அடுத்து 32 ரன்கள் வரை சேர்த்தார். இதைக் கண்ட சென்னை அணியின் ரசிகர்கள், இந்த நேரத்தில் தோனி இருந்திருந்தால் அந்த விக்கெட்டை கேட்டிருப்பாரே என புலம்பிக் கொண்டே போட்டியை பார்த்தனர்.

Story first published: Saturday, April 27, 2019, 0:08 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
IPL 2019 CSK vs MI : Ambati Rayudu failed to notice an edge and Evan Lewis get a life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X