For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-இல் இந்திய வீரர்கள் என்னதான் செஞ்சாங்க? எத்தனை பேரு உலகக்கோப்பைக்கு தேறுவாங்க?

மும்பை : 2019 ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவடைந்து, இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் ஒவ்வொரு இந்திய வீரரும் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்பட்டார்கள்?

ஒவ்வொரு பேட்ஸ்மேன் எடுத்த ரன்கள், பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட்கள், ஆல்-ரவுண்டரின் செயல்பாடு ஆகியவற்றை வைத்து உலகக்கோப்பைக்கான இந்திய அணி எந்த நிலைமையில் உள்ளது என பார்க்கலாம்.

WATCH:ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா... ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா..!! சொன்னபடி மும்பையை ஜெயிக்க வைச்சுட்டே..! வைரல் வீடியோ WATCH:ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா... ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா..!! சொன்னபடி மும்பையை ஜெயிக்க வைச்சுட்டே..! வைரல் வீடியோ

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

பேட்டிங் - 15 இன்னிங்க்ஸ்களில் 405 ரன்கள். சராசரி 28.92. 2 அரைசதம். ஸ்ட்ரைக் ரேட் 128.

சராசரியாகவே ரோஹித் சர்மா ஆடியுள்ளார். சிக்ஸர் மன்னனான ரோஹித், இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 10 சிக்ஸர் மட்டுமே அடித்திருப்பதும், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் வரிசையில் 38வது இடத்தில் இருப்பதும், சில போட்டிகளில் மட்டுமே நிலைத்து நின்று ரன் குவிப்பதும் கவலை அளிப்பதாகவே உள்ளது.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

பேட்டிங் - 16 இன்னிங்க்ஸ்களில் 521 ரன்கள். சராசரி 34.73. ஸ்ட்ரைக் ரேட் 135. 5 அரைசதம்.

தவான் ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்த பார்மை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளார். சில போட்டிகள் தவிர, நிலைத்து நின்று ரன் குவித்தார் அல்லது அதிரடியான துவக்கம் அளித்து அணிக்கு உதவினார்.

விராட் கோலி

விராட் கோலி

பேட்டிங் - 14 இன்னிங்க்ஸ்களில் 464 ரன்கள். சராசரி 33. ஸ்ட்ரைக் ரேட் 141. 1 சதம். 2 அரைசதம்.

விராட் கோலி தன் வழக்கமான பேட்டிங் பார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக கோலி களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலோ, என்னவோ, சில போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அது மட்டுமே ஒரு சிறு குறை.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

பேட்டிங் - 14 இன்னிங்க்ஸ்களில் 244 ரன்கள். சராசரி 20. ஸ்ட்ரைக் ரேட் 126. அதிகபட்ச ரன்கள் - 40.

பந்துவீச்சு - 5 போட்டிகளில், 8 ஓவர்கள் பந்துவீசி, 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

விஜய் ஷங்கர் நிலை பரிதாபம் தான். உலகக்கோப்பை அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட பின், ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் மொத்தமாக படுத்துவிட்டது. அதற்கு முன் சுமாராக ஆடினார்!! பந்துவீச்சு பற்றி சொல்லிக் கொள்ளும் அளவு ஒன்றும் இல்லை. அவருக்கு ஓவர் கொடுக்கவே யோசித்தனர்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

பேட்டிங் - 13 இன்னிங்க்ஸ்களில் 253 ரன்கள். சராசரி 31, (5 நாட்-அவுட்). ஸ்ட்ரைக் ரேட் 146. 2 அரைசதம்.

விக்கெட் கீப்பிங் - 7 கேட்ச்கள், ஸ்டம்பிங் ஏதும் இல்லை.

தினேஷ் கார்த்திக் 2 போட்டிகளில் கொல்கத்தா அணியை ஆபத்பாந்தவனாக மீட்டார். பல போட்டிகளில் அதிரடி காட்ட வேண்டிய நிர்பந்தத்தால் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி ஆட்டம் அவரை காப்பாற்றுகிறது. விக்கெட் கீப்பிங், தோனிக்கு ஈடாகவில்லை.

கே எல் ராகுல்

கே எல் ராகுல்

பேட்டிங் - 14 இன்னிங்க்ஸ்களில் 593 ரன்கள். சராசரி 53.90. ஸ்ட்ரைக் ரேட் 135. 1 சதம். 6 அரைசதம். 25 சிக்ஸர்கள்.

ராகுல் ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணிக்கு தேர்வாவது சந்தேகம். பார்மை முழுமையாக நிரூபிக்கவில்லை என பல இக்கட்டில் இருந்து வந்தார். ஆனால், ஐபிஎல்-இல் முற்றிலும் புதிய ராகுலாக மாறி தெறிக்க விட்டார். இவர் உலகக்கோப்பை அணியில் வேண்டாம் என்ற ரசிகர்களே, இவருக்கு உலகக்கோப்பை அணியில் களமிறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சொல்லும் நிலையை உருவாக்கி உள்ளார்.

தோனி

தோனி

பேட்டிங் - 12 இன்னிங்க்ஸ்களில் 416 ரன்கள். 7 நாட் அவுட். சராசரி 83. ஸ்ட்ரைக் ரேட் 134. 3 அரைசதம். 23 சிக்ஸர்கள்.

விக்கெட் கீப்பிங் - 11 கேட்ச்கள். 5 ஸ்டம்பிங்.

இந்த ஐபிஎல்-இல் தோனி மிரட்டினார். இதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

பேட்டிங் - 12 இன்னிங்க்ஸ்களில் 162 ரன்கள். சராசரி 18. ஸ்ட்ரைக் ரேட் 95. 1 அரைசதம்.

ஐபிஎல் தொடரில் ஜாதவ் நிலை தான் இந்திய அணி வீரர்களிலேயே படுமோசம். தற்போது அவர் காயத்தில் இருப்பதால், அதை காரணம் காட்டி அவரை அணியில் இருந்து நீக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

ஹர்திக் பண்டியா

ஹர்திக் பண்டியா

பேட்டிங் - 15 இன்னிங்க்ஸ்களில் 402 ரன்கள். 6 நாட் அவுட். சராசரி 44. ஸ்ட்ரைக் ரேட் 191. 1 அரைசதம்.

பந்துவீச்சு - 16 போட்டிகளில் 14 விக்கெட்கள்.

ஹர்திக் பண்டியா ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கினார். அவரைக் கண்டாலே எதிரணிகள் மிரண்டன என்பதே உண்மை. பந்துவீச்சில் இவருக்கு முழுமையாக 4 ஓவர்களும் கொடுக்காமல், துருப்புச் சீட்டாக வைத்து, எதிரணியை மிரட்டினார் மும்பை கேப்டன் ரோஹித். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பண்டியா டாப்!!

யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹல்

பந்துவீச்சு - 14 போட்டிகளில் 18 விக்கெட்கள்.

ஐபிஎல் தொடரில் சாஹல் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. சில போட்டிகளில் ரன்களை வாரி இறைத்தார். எனினும், விக்கெட்கள் எடுப்பதில் சிறந்து விளங்கினார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

பந்துவீச்சு - 9 போட்டிகளில் 4 விக்கெட்கள்.

ஐபிஎல் தொடரில் குல்தீப் தன் அட்டகாசமான பார்மை இழந்தார். இவரது பந்துவீச்சை எதிரணிகள் அடித்து நொறுக்கினர். அவரால் விக்கெட்டும் எடுக்க முடியவில்லை. 9 போட்டிகளுக்குப் பின் கொல்கத்தா அணி குல்தீப் யாதவ்வை "கழட்டி விட்டது" குறிப்பிடத்தக்கது.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

பந்துவீச்சு - 16 போட்டிகளில் 15 விக்கெட்கள்.

பேட்டிங் - 9 இன்னிங்க்ஸ்களில் 106 ரன்கள். 6 நாட் அவுட். சராசரி 35.

ஜடேஜா பந்துவீச்சு எப்போதும் போல சிறப்பாக இருந்தது. ரன்களைக் கட்டுப்படுத்தினார், விக்கெட்களும் எடுத்தார். பேட்டிங்கில் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை,

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

பந்துவீச்சு - 15 போட்டிகளில் 13 விக்கெட்கள்.

புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு ஓரளவு நன்றாகவே இருந்தது. அவரது பந்துவீச்சில் ஹைதராபாத் அணியினர் எராளமான கேட்ச்களை கோட்டை விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமி

முகமது ஷமி

பந்துவீச்சு - 14 போட்டிகளில் 19 விக்கெட்கள்

இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் ஷமி. ரன்களை சற்றே அதிகமாக கொடுத்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ரா

ஜஸ்ப்ரிட் பும்ரா

பந்துவீச்சு - 16 போட்டிகளில் 19 விக்கெட்கள்

பும்ரா பந்துவீச்சை சந்திக்க சில அதிரடி வீரர்கள் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறினர். விக்கெட் வீழ்த்துவதிலும் பும்ரா சிறப்பாக செயல்பட்டார்.

Story first published: Wednesday, May 15, 2019, 18:49 [IST]
Other articles published on May 15, 2019
English summary
IPL 2019 : Indian team members performance in IPL ahead of World cup 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X