For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது.. இந்த ஐபிஎல் போட்டி பிக்ஸிங்கா? ஆதாரத்தை பார்த்தா நம்பற மாதிரியே இருக்கே!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்ற போட்டி பிக்ஸிங் எனக் கூறி ஒருவர் ஒரு ட்விட்டர் பதிவை போட்டிருக்கிறார்.

அவர் அந்தப் பதிவை நகைச்சுவையாகவே போட்டிருந்தாலும், அந்த பதிவில் இருக்கும் விஷயத்தை பார்த்தால், ஒரு நிமிடம் அது உண்மை தானோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஓட்டு போடணும்... கிரிக்கெட் வீரர்களுக்கு பர்மிஷன் கொடுங்க... சவ்கிதாருக்கு கோரிக்கை வைத்த அஸ்வின் ஓட்டு போடணும்... கிரிக்கெட் வீரர்களுக்கு பர்மிஷன் கொடுங்க... சவ்கிதாருக்கு கோரிக்கை வைத்த அஸ்வின்

ட்விட்டர் கேள்வி

விஷயம் இது தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் போட்டிக்கு முந்தைய நாள் ரசிகர்களிடையே தங்கள் வீரர்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கேள்வி

கேள்வி

அதாவது, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் இவர்களில் நீங்கள் யாரை அனுப்புவீர்கள்? என்ற கேள்வியும் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் ப்ராத்வைட், ரிங்கு சிங் என கேள்விக்கான விடையாக வீரர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.

கடைசி ஓவரில்..

கடைசி ஓவரில்..

இந்த பதிவைப் போலவே, அடுத்த நாள் நடந்த கொல்கத்தா - ஹைதராபாத் போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளை சந்தித்தார்.

போட்டி பிக்ஸிங்

அந்த போட்டியில் 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என இக்கட்டான சூழலில் ரஸ்ஸல் அதிரடியாக ஆடி அணியை மீட்டார். அந்த ட்விட்டர் பதிவின் நிலையை ஒற்று சில விஷயங்கள் போட்டியில் நடந்ததை ஒருவர் குறிப்பிட்டு, நகைச்சுவையாக ஐபிஎல் போட்டி பிக்ஸிங் என குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, March 25, 2019, 20:00 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
IPL 2019 : KKR asks question to its fans and it lands in controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X