For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெளம்பு.. கெளம்பு.. தேர்தல் வருது!! வெளிநாட்டுக்கு ஓடுகிறதா ஐபிஎல்?

மும்பை : 2௦19ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது.

பிரச்சனைகளை தவிர்க்க கடந்த தேர்தல்களின் போது வெளிநாடுகளுக்கு சென்றது போல, இந்த முறையும் அது போல வெளிநாடுகளில் ஐபிஎல் நடத்தப்படுமா என்பது பற்றிய செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளது.

ஆனால், அனைத்துமே இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதிகளைப் பொறுத்துதான் அமையும்.

கசக்கும் தேர்தல்

கசக்கும் தேர்தல்

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை, தேர்தல் என்றாலே கொஞ்ச தூரம் விலகி விடும். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் ஐபிஎல் இங்கு நடந்தால் அது அரசியல்வாதிகளுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை, அதே போல, மக்களும் சில சமயம் ஐபிஎல் போட்டிகள் அந்த நேரத்தில் நடப்பதை விரும்புவதில்லை.

கடந்த தேர்தல்களில்

கடந்த தேர்தல்களில்

இதற்கு முன் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்த போது ஒரு முறை முழுமையாக தென்னாபிரிக்காவிலும், மற்றொரு முறை சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அல்லது இங்கிலாந்து

ஐக்கிய அரபு அல்லது இங்கிலாந்து

பிசிசிஐ-இன் விருப்பப் பட்டியலில் மூன்று நாடுகள் உள்ளன. தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து . இதில் இங்கிலாந்தில் நடத்தப்பட வாய்ப்பு குறைவு. காரணம், அங்கே செலவுகள் அதிகம். அதற்கேற்ற அளவு சம்பாதிக்கவும் முடியாது. ஐக்கிய அரபை பொறுத்தவரை மூன்று பெரிய மைதானங்கள் மட்டுமே உள்ளது. அங்கே ஐபிஎல் நடத்துவது மிகவும் சிரமம்.

தென்னாபிரிக்காவுக்கே அதிக வாய்ப்பு

தென்னாபிரிக்காவுக்கே அதிக வாய்ப்பு

ஏற்கனவே, 2009இல் தென்னாபிரிக்காவில் முழு தொடரும் நடத்தப்பட்டது. அங்கே கிரிக்கெட் ரசிகர்களும் ஓரளவு அதிகம். பிசிசிஐ-க்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். எனவே, அங்கே தொடர் நடத்தப்படவே அதிக வாய்ப்புள்ளது என தெரிகிறது, அதே சமயம், பிசிசிஐ இந்த மூன்று நாடுகளிடமும் அவர்கள் கருத்தை அறிய முயன்று வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Story first published: Tuesday, September 11, 2018, 13:53 [IST]
Other articles published on Sep 11, 2018
English summary
IPL 2019 may not take place in India due to elections
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X