எப்படி இது? எகிறிய ஹார்ட் பீட்.. நம்ப முடியாத சம்பவம்.. ஒரே நாளில் 3 சூப்பர் ஓவர்.. ரசிகர்கள் குஷி!

துபாய் : இதுவரை ஐபிஎல் வரலாற்றில் நடக்காத சம்பவம் நடந்தது. ஒரே நாளில் நடந்த இரு போட்டிகளும் டை ஆனது.

முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த போட்டி டையில் முடிந்தது.

அடுத்து இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன போட்டியும் டையில் முடிந்தது. இதில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில் முதல் சூப்பர் ஓவர் டை ஆகி, இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது.

இப்படி ஒருத்தர் தேவையே இல்லை வீட்டுக்கு அனுப்புங்க.. அதிரடி வீரர் செய்த காரியம்.. ரசிகர்கள் விளாசல்

முதல் போட்டி

முதல் போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன போட்டியில் முதலில் நடந்த 20 ஓவர் ஆட்டத்தில் இரு அணிகளும் 163 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து அந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. லாக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் 2 விக்கெட்களையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். கொல்கத்தா அணி நான்கு பந்துகளில் வெற்றி இலக்கை கடந்தது.

மும்பை - பஞ்சாப் போட்டி

மும்பை - பஞ்சாப் போட்டி

அடுத்து நடந்த மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தன. அந்தப் போட்டியும் டை ஆனது. இதை அடுத்து ஒரே நாளில் இரண்டு ஐபிஎல் போட்டிகள் டை ஆன அதிசயம் நடந்தது.

அடுத்த சூப்பர் ஓவர்

அடுத்த சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவரில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பும்ரா வீசிய அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்து மும்பை அணி ஷமி வீசிய சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பந்தில் டி காக் அவுட் ஆனார்.

இரண்டாவது சூப்பர் ஓவர்

இரண்டாவது சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர் டை ஆனதை அடுத்து போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறை ஜோர்டான் பந்து வீச பொல்லார்டு - ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து 11 ரன்கள் சேர்த்தனர்.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை ஆட வைத்தது. அவர் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். மயங்க் அகர்வால் இரண்டு ஃபோர் அடித்தார். பஞ்சாப் அணி நான்காவது பந்தில் முழுமையாக வெற்றி பெற்றது.

ரசிகர்கள் வியப்பு

ரசிகர்கள் வியப்பு

ஒரே நாளில் இரண்டு போட்டிகள் டை ஆகி, அதில் மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது ரசிகர்களை வியப்படைய வைத்தது. இரண்டு போட்டிகளும் ஹார்ட் பீட்டை எகிற வைத்தன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 : 2 IPL matches tied on same day
Story first published: Sunday, October 18, 2020, 23:55 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X