4 ஓவரில் 4 விக்கெட்.. பிளே-ஆஃப் வாய்ப்பும் போச்சு.. ராஜஸ்தான் சரண்டர்.. கொல்கத்தா இமாலய வெற்றி!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுமோசமான தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

191 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

3 பேர் டக் அவுட்.. வெறியாட்டம் ஆடிய மார்கன்.. ரஸ்ஸல் அதிரடி.. கொல்கத்தா இமாலய ஸ்கோர்!

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மூன்று வீரர்கள் டக் அவுட் ஆன போதும் கேப்டன் இயான் மார்கன் அணியை கரை சேர்த்தார்.

தோல்வி உறுதி

தோல்வி உறுதி

மார்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இது பெரிய ஸ்கோர் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடையும் என்று பலரும் கணித்தனர்.

தோல்வி உறுதி

தோல்வி உறுதி

அடுத்து ஆடத் துவங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து தவித்தது. உத்தப்பா 6, ஸ்டோக்ஸ் 18, ஸ்டீவ் ஸ்மித் 4, சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.அப்போதே ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.

வெற்றி

வெற்றி

அடுத்து ஜோஸ் பட்லர் 35, ராகுல் திவேதியா 31 ரன்கள் எடுத்த போதும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

இந்த தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த சீசனில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் இரண்டாவது அணியாகும். கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் ஹைதராபாத் அணியின் தோல்வியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 KKR vs RR : Kolkata Knight Riders vs Rajasthan Royals match result
Story first published: Monday, November 2, 2020, 0:17 [IST]
Other articles published on Nov 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X