For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் போட்டிகளை சின்ன வயசுல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.. ரொம்ப உற்சாகமா இருக்கு.. பான்டன்

துபாய் : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் டாம் பான்டன்.

Recommended Video

Raina wants to promote Cricket in Jammu and Kashmir | OneIndia Tamil

தன்னுடைய சிறுவயதில் இருந்தே தான் ஐபிஎல் போட்டிகளை பார்த்து வருவதாகவும், அதில் பங்கேற்க உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேகேஆர் வலைதளத்தில் பேசிய அவர், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் பாட் கமின்ஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடவும் அவர்களிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேரா ஐபிஎல்-லுக்கு தான் வருவோம்.. இந்த 3 சிஎஸ்கே வீரர்கள் மட்டும் ஸ்பெஷல்!நேரா ஐபிஎல்-லுக்கு தான் வருவோம்.. இந்த 3 சிஎஸ்கே வீரர்கள் மட்டும் ஸ்பெஷல்!

ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பான்டன்

ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பான்டன்

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான தனது முதல் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் பான்டன். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவரை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் பான்டன் ஐபிஎல்லிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுணுக்கங்களை கற்க விருப்பம்

நுணுக்கங்களை கற்க விருப்பம்

இந்நிலையில் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் பாட் கமின்ஸ் ஆகிய வீரர்களுடன் இணைந்து விளையாடவும் அவர்களிடம் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ளவும் தான் ஆவலுடன் காத்திருப்பதாக டாம் பான்டன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேகேஆர் இணையதளத்தில் பேசியுள்ள அவர், ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ரஸ்ஸல் மிகவும் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களுடன் விளையாட விருப்பம்

இந்திய வீரர்களுடன் விளையாட விருப்பம்

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடி 56.66 சராசரியுடன் 510 ரன்களை குவித்த ரஸ்ஸல், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனிடையே, அன்டர் -19 உலக கோப்பையில் தான் எதிர்த்து விளையாடிய ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோட்டி, சுப்மன் கில் ஆகியோருடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருப்பதாக டாம் பான்டன் தெரிவித்துள்ளார்.

நிஜமாகவுள்ள ஐபிஎல் கனவு

நிஜமாகவுள்ள ஐபிஎல் கனவு

கடந்த 2018ல் நடைபெற்ற இந்த உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடியதாகவும், அவர்களுடன் இணைந்து விளையாடுவது பெருமை அளிப்பதாகவும் பான்டன் கூறினார். மேலும் ஐபிஎல் போட்டிகளை தான் சிறுவயதில் இருந்து ஐபிஎல் போட்டிகளை பார்த்து வருவதாகவும், அதில் இணைந்து விளையாடுவது தனது கனவு என்றும் தற்போது அது நிஜமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, August 28, 2020, 17:58 [IST]
Other articles published on Aug 28, 2020
English summary
I remember the Indians were a lot better than all of us in the 2018 Under-19 World Cup -Banton
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X