For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி அப்படி பேசலாம்?.. தீயாக மாறிய திவாதியா.. கெஞ்சிய கலீல்.. போட்டி முடிந்த பின்பும் வாக்குவாதம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா கடைசி ஓவரில் மிகவும் கோபமாக காணப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இவர் கடைசி ஓவரில் ஹைதராபாத் வீரர் கலீல் உடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

நேற்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. போட்டி தொடக்கத்தில் இருந்து ஹைதராபாத் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வந்த ராகுல் திவாதியா, ரியான் பராக் மொத்தமாக ஆட்டத்தையே மாற்றினார்கள்.

மொத்தமாக ஹைதராபாத் அணியிடம் இருந்து ஆட்டத்தை பறித்து ராஜஸ்த்தானை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இந்த போட்டியிலும் ராகுல் திவாதியா மேட்ச் வின்னராக மாறினார்.

கடைசியில் எப்படி

கடைசியில் எப்படி

கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் 65 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஹைதராபாத் அணியின் பவுலிங் வலிமையாக இருப்பதால் கண்டிப்பாக ராஜஸ்தான் தோல்வி அடையும் என்றுதான் எல்லோரும் கணித்து இருந்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ராகுல் திவாதியா 28 பந்தில் 45 ரன்களும், ரியான் பாரக் 26 பந்தில் 42 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் 158 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் 163 ரன்களை எடுத்து வென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் கலீல் போட்ட 19வது ஓவரில்தான் சண்டை நடந்தது. அந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நிலை இருந்தது. ராஜஸ்தான் வீரர்கள் இருவரும் சிங்கிள் அடித்தும், 2 ரன்கள் ஓடியும் இலக்கை நெருங்கி வந்தனர். அப்போது பேட்டிங் செய்து வந்த ராகுல் திவாதியாவிடம் கலீல் அஹமது எதோ சொல்ல திவாதியா கடுமையாக கோபம் அடைந்தார்.

கோபம்

கோபம்

அந்த பாலில் சிங்கிள் அடித்துவிட்டு ராகுல் திவாதியா ரன்னர் எண்டிற்கு சென்றார். அங்கு கலீல் அஹமதிடம் திவாதியா சண்டைக்கு சென்றார். நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். ஆனால் திவாதியா உடன் சண்டைக்கு செல்ல கலீலிற்கு விருப்பம் இல்லை.. இதனால் என்னை விட்டுவிடு என்பது போல கலீல் திவாதியாவிடம் கூறினார்.

மோசம்

மோசம்

ஆனால் திவாதியா விட்டுக்கொடுப்பதாக இல்லை. அந்த ஓவர் முடியும் வரை திவாதியா கோபமாகவே இருந்தார். அதன்பின் ஓவர் முடிந்த பின்பும் கூட திவாதியா கோபமாக சென்று, கலீலிடம் பேசினார். நீங்கள் ஏன் அப்படி பேசினீர்கள் என்று கலீலிடம கடுமையாக கேள்விகளை எழுப்பினார். ஆனால் கலீல் இதற்கு பதில் சொல்லவில்லை.

வார்னர்

வார்னர்

இதனால் அங்கு சண்டை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வார்னர் வேகமாக களத்திற்கு வந்தார்.. திவாதியாவிடம் சமாதானம் செய்தார். நீண்ட நேரம் இவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்தனர். வார்னரிடமும் திவாதியா கடுமையாக பேசினார். இதன்பின் நடுவர்கள் வந்த சமாதானம் செய்து வீரர்களை அனுப்பி வைத்தனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:49 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL 2020: Tewatia had a talk with Khaleel- What happened during the match yesterday?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X