மும்பை அணியை தடுக்க அந்த ஒரு அணியால் மட்டுமே முடியும்... அடித்து கூறும் முன்னாள் வீரர்..அவ்ளோ பலமா?

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியை கடும் சவால் கொடுக்க எந்த அணிகளால் முடியும் என முன்னாள் வீரர் கணிக்கத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகிறது.

6 பந்துகள மட்டும் வச்சுக்கிட்டு சிறப்பான பௌலர்னு மீண்டும் நிரூபிச்சிருக்காரு... சாம் கர்ரன் பாராட்டு

இந்நிலையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரே ஒரு அணியால் மட்டும் தான் தடுக்க முடியும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் வரலாற்றிலேயே 5 முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும். கடந்த 2 ஆண்டுகளும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள மும்பை அணி இந்தாண்டும் அசுர பலத்துடன் களமிறங்குகிறது. இந்த அணியின் வீரர்கள் பலர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் பங்கேற்று நல்ல ஃபார்மில் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே இந்தாண்டு ஹாட்ரிக் வெற்றியை மும்பை அணி பதிவு செய்யும் என கூறப்படுகிறது.

 அந்த ஒரு அணி

அந்த ஒரு அணி

இந்நிலையில் மும்பை அணியின் சாம்பியன் ஆவதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் முட்டுக்கட்டை போட முடியும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், டெல்லி அணி மிகுந்த பலம் பொருந்திய ஒன்று. அணியின் அனைத்து துறைகளிலும் வீரர்கள் பொறுத்தமாக உள்ளனர். ரிஷப் பண்ட்-ன் தலமையில் பலம் வாய்ந்த அணியாக திகழும் என தெரிவித்துள்ளார்

விளக்கம்

விளக்கம்

டெல்லி அணிக்கு முதல் பலமே சிறந்த இந்திய வீரர்கள் அணிக்குள் இருப்பதுதான். அங்கு ஷிகர் தவான், ரஹானே, ப்ரித்வி ஷா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர். இந்த சிறப்பான இந்திய வீரர்கள் படை சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து கொடுப்பார்கள். இது அவர்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

பந்துவீச்சை பொறுத்தவரையில் டெல்லி அணியில் உமேஷ் யாதவ், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் ரபாடா, ஆன்ரிச் நார்ட்ஜே, கிறிஸ் வோக்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளனர். எனவே இந்தாண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Aakash Chopra names the team which can challenge Mumbai Indians in IPL 2021
Story first published: Wednesday, April 7, 2021, 18:29 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X