ஐபிஎல் 2021: இந்த முறையும் சிஎஸ்கே இல்லையா.... மைக்கேல் வாகனின் கணிப்பு... அதிருப்தியில் ரசிகர்கள்!

மும்பை: இந்தாண்டு ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லும் என மைக்கேல் வாகன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனிடையே முன்னாள் வீரர்கள் பலர், அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை மனதில் வைத்து தங்களது கணிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்தாண்டு எந்த அணி கோப்பையை வெல்லும் எனக்கூறியுள்ளார்.

சாம்பியன்

சாம்பியன்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மைக்கேல் வாகன், இந்த முறை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் அப்படி ஒருவேளை மும்பை அணி வெற்றி பெறவில்லை என்றால் அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

பலமான அணி

பலமான அணி

மும்பை அணி ஐபிஎல் வரலாற்றிலேயே 5 முறை கோப்பை வென்ற பலம் வாய்ந்த அணியாகும். கடந்த 2 ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல தீவிரமாக உள்ளது. எனவே மைக்கேல் வாகனின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கம்பேக் கொடுக்க வேண்டும்

கம்பேக் கொடுக்க வேண்டும்

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு ப்ளே ஆப்க்கு கூட செல்லாமல் சொதப்பியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனுக்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. இதே போல கொல்கத்தா அணி 2014ம் ஆண்டுக்கு பிறகும் ஐதரபாத் அணி 2016ம் ஆண்டுக்கு பிறகும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. எனவே இந்த அணிகளும் கடுமையாக போராடும் எனக்கூறப்படுகிறது.

சிறந்த ப்ளேயிங் 11

சிறந்த ப்ளேயிங் 11

டிகாக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, பொல்லர்ட், க்ருணால் பாண்டியா, பும்ரா, ட்ரெண்ட் போல்ட், நாதன் கௌல்டர் நைல், ராகுல் சஹார்? பியூஸ் சாவ்லா

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Michael Vaughan Predicts who wil win IPL trophy this year..!
Story first published: Wednesday, April 7, 2021, 17:00 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X