நோ மீன்ஸ் நோ....ஜெர்ஸி விவகாரத்தில் கறார் காட்டிய மொயின் அலி.. சி.எஸ்.கே எடுத்த நடவடிக்கை - விவரம்!

மும்பை: சென்னை அணியின் ஒரு செயலுக்கு வீரர் மொயின் அலி மிகவும் ஸ்ட்ரிக்டாக நோ செல்லியுள்ளார்.

வரும் ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி வீரர்கள் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பலமாக களமிறங்கவுள்ளது.

குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன?

இந்நிலையில் அணியின் ஜெர்ஸியில் மாற்றம் செய்ய வேண்டும் என மொயின் அலி சென்னை அணிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் சென்னை அணி வரும் ஏப்.10ம் தேதி டெல்லியுடன் தனது முதல் போட்டியை ஆடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை அணி சமீபத்தில் தனது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது. அதில் 3 முறை சாம்பியன் என குறிக்கும் 3 நட்சத்திரங்கள், ராணுவ உடையின் டிசைன் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் மொயின் அலிக்கு மட்டும் ஜெர்ஸியில் குறை இருந்துள்ளது.

பிரச்னை?

பிரச்னை?

சி.எஸ்.கே அணியின் ஜெர்ஸியில், சென்னையை சேர்ந்த மதுபானம் ஒன்றின் விளம்பரம் போடப்பட்டிருந்தது. இதை பார்த்த மொயின் அலி, தனது ஜெர்ஸியில் மதுபானங்கள் குறித்த விளம்பரங்கள் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும், தனது ஜெர்ஸியில் இருந்து அதனை நீக்குமாறும் அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 பழக்கம்

பழக்கம்

இங்கிலாந்து வீரரான மொயின் அலி, தனது மத நெறிகளை பின்பற்றும் வகையில் மதுபானங்கள் சம்பந்தப்பட்ட எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டார். அதே போல ஏதேனும் ஒரு கோப்பையை வென்றால் கூட கொண்டாட்டத்தின் போது நகர்ந்து சென்றுவிடுவார். இவரை போலவே தான் மற்றொரு இங்கிலாந்து வீரர் அடில் ரஷித்தும்.

நடவடிக்கை

நடவடிக்கை

மொயின் அலியின் கோரிக்கை குறித்து அறிந்த சென்னை அணி நிர்வாகம் உடனடியாக அவரின் ஜெர்ஸியில் மதுபானம் குறித்த விளம்பரம் இடம்பெறாது என உறுதியளித்துள்ளது. அணி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Moeen Ali's requests to CSK Management on his jersey for IPL 2021
Story first published: Sunday, April 4, 2021, 15:29 [IST]
Other articles published on Apr 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X