‘சம்பவம் இருக்கு’ பயிற்சியில் காட்டுத்தனமாக சிக்ஸர் விளாசும் தோனி.. புதிய வீடியோவால் ரசிகர்கள் குஷி

அமீரகம்: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டிக்காக தோனி பயிற்சி போட்டியிலேயே மரண அடி காட்டி வருகிறார்.

Dhoniயின் வெறித்தனமான Net Practice Session | IPL 2021 | CSK | OneIndia Tamil

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் நாளை முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

மீதமுள்ள 31 போட்டிகளை 21 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

ஐபிஎல்: குழப்பத்தில் இருக்கும் தோனி.. முதல் போட்டியே மும்பையுடன்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதோ! ஐபிஎல்: குழப்பத்தில் இருக்கும் தோனி.. முதல் போட்டியே மும்பையுடன்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11 இதோ!

ஐபிஎல் முதல் போட்டி

ஐபிஎல் முதல் போட்டி

மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு சரவெடி விருந்து வைத்துள்ளது பிசிசிஐ. அதாவது அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியிருந்தது. எனவே சிஎஸ்கே பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

கடந்தாண்டு படு சொதப்பலாக விளையாடிய சிஎஸ்கே அணி இந்தாண்டு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. அந்த அணியை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் தோனியின் பேட்டிங் ஃபார்ம் மட்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37 ரன்களை மாறுமே அடித்துள்ளார்.

 தோனி தீவிரம்

தோனி தீவிரம்

இந்நிலையில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தோனி படு தீவிரமாக தயாராகி வருகிறார். அமீரகத்தில் சென்னை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. அங்கு தினமும் 3 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். குறிப்பாக சிக்ஸர்களுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இதுகுறித்து சிஎஸ்கே அணி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே வீடியோ

சிஎஸ்கே வீடியோ

அந்த வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை விளாசி வருகிறார். சிங்கிள்களை அடிக்காமல் பழைய ஃபார்மில் சிக்ஸர்களை விளாசி பயிற்சி மேற்கொண்ட தோனி, இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் நிச்சயம் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணி இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுவிடும். அதேபோன்று மும்பை அணியும் 4-5 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni’s Explosive Hitting In Chennai Super Kings' Practice Match ahead of IPL 2021
Story first published: Saturday, September 18, 2021, 18:01 [IST]
Other articles published on Sep 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X