For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்.சி.பிக்கு கப்-ஐ ஜெயிச்சி தர ஆள் வந்தாச்சு....கோலியுடன் ஆட எதிர்பார்த்து காத்துள்ளார்.யார் அவர்?

பெங்களூரு: ஐபிஎல் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது குறித்து அணியின் புதிய வீரர் டான் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம

இந்நிலையில் பெங்களூரு அணியில், விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் குறித்து டான் கிறிஸ்டியன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் வருகை

வீரர்கள் வருகை

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை - இந்தியன்ஸ் அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதுவரை ஒரு முறைகூட கோப்பை வெல்லாத பெங்களுரு அணி இந்த முறை எப்படியாவது சாம்பியனாக வேண்டும் என்ற முடிவுடன் வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற போதும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. எனவே அணியில் பல மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

ஏலம்

ஏலம்

பெங்களூர் அணியில் ஏற்கனவே பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாகும். அதற்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் டான் கிறிஸ்டியனை ரூ.4.8 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது. இவர் கிறிஸ் மோரிஸுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல மற்றொரு ஆஸ்திரேலிய விரர் க்ளென் மேக்ஸ்வெல்லும் அணிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்நிலையில் ஆர்.சி.பி அணியில் ஆடுவது குறித்து பேசியுள்ள டான் கிறிஸ்டியன், அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்ந்து ஆடவிருப்பது உற்சாகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல மற்றொரு புறம் சொந்த நாட்டு வீரர் மேக்ஸ்வெல்லும் அணியில் இருப்பதால் சிறப்பாக இருக்க போகிறது என தெரிவித்தார்.

சாம்பியன்

சாம்பியன்

மேலும் அவர், இந்த முறை நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம். கோப்பையை வெல்ல எங்களால் முடியும். அதனை அடைய நான் அணிக்கு மிக உதவியாக இருப்பேன். வரும் ஐபிஎல் போட்டியை மிகவும் எதிர்நோக்கி உள்ளேன் என டான் கிறிஸ்டியன் தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 30, 2021, 16:35 [IST]
Other articles published on Mar 30, 2021
English summary
RCB's latest recruit Dan Chrisitian wants to help the team to win the title in this season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X