For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL T20: ராஜஸ்தான் அணியை துவைத்து எடுத்த பெங்களூரு.. தெறிக்கவிட்ட ஆர்சிபி வீரர்கள்

துபாய்: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 149 ரன்களை எடுத்தது. அதன் பிறகு ஆடிய பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த மே மாதம் கொரோனா காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐக்கிய அமீரகத்தில் இன்றைய லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி, 7ஆவது இடத்திலுள்ள ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணியிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

பெங்களூரு அணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் கார்டன் அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். அதேபோல கைல் ஜேமிசன் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல ராஜஸ்தான் அணியில் ஜய்தேவ் உனத்கட் பதிலாக கார்த்திக் தியாகி களமிறக்கப்பட்டுள்ளார். இன்று போட்டி தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆட தொடங்கியது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெங்களூரு பவுலர்களை புரட்டி எடுத்தனர். இதனால் பவர் ப்ளே முழுவதும் அனைத்து ஓவர்களிலும் சிக்சர்கள் பவுண்டரிகள் எனப் பறந்த வண்ணம் இருந்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

பவுர் ப்ளே இறுதியில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்திருந்து. இருப்பினும், அதன் பிறகு ராஜஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களிலும் எவின் லூயிஸ் 58 ரன்களிலும் சில ஓவர் இடைவெளியில் வெளியேறினார்கள். அடுத்து களமிறங்கிய மஹிபால் லோமோர் வேகத்தில் நடையைக் கட்டினார். ஷாபாஸ் அகமது வீசிய 14 ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு இரட்டை செக் வைத்தார். சஞ்சு சாம்சன், ராகுல் தெவாத்தியா ஒரே ஓவரில் வெளியேறினார்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து வந்த ராஜஸ்தான் ரன் குவிக்கத் திணறினர். 20ஆவது ஓவரை சிறப்பாக வீசிய ஹர்ஷல் பட்டேல் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்ககளை வீழ்த்தினார் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சூப்பர் தொடக்கம் கிடைத்தது. 6ஆவது சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் (22 ரன்கள்) முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் போல்ட் ஆனார்.

கோலி ரன் அவுட்

கோலி ரன் அவுட்

பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 23 ரன்களுடனும், ஸ்ரீகர் பரத் 3 ரன்களுடனும் களத்திலிருந்தனர். அப்போது சீராக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி (25 ரன்கள்) அட்டகாசமான டெயரட் த்ரோவில் ரன் அவுட் ஆனார். சூப்பராக ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பரத் 16ஆவது ஓவரில் 44 ரன்களில் வெளியேறினார்.

பெங்களூரு வெற்றி

பெங்களூரு வெற்றி

பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மெக்ஸ்வெல் 30 பந்துகளில் அரைசதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல டி வில்லியர்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 7 வெற்றிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. அதேநேரம் 7ஆவது தோல்வியைச் சந்தித்துள்ள ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு மங்கியுள்ளது.

Story first published: Thursday, September 30, 2021, 1:39 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
IPL t20 latest updates. Royal Challengers Bangalore vs Rajasthan Royals latest update.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X