For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

107 கிலோ உடல் எடை.. விளையாட வாய்ப்பு கிடைக்காது.. வாட்டர் பாயாக இருந்தேன்.. சிஎஸ்கே வீரரின் கதை

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் கலக்கி வரும் இலங்கை வீரர் தீக்சனா, தமது கடினமான கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி மனம் திறந்தார்.

Recommended Video

Maheesh Theekshana-வின் நம்பமுடியாத Weight Loss! Fitness Transformation கதை | OneIndia Tamil

சிஎஸ்கே அணிக்காக தேர்வான தீக்சனா 8 போட்டியில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சிஎஸ்கேவின் தவிர்க்க முடியாத வீரராக தீக்சனா விளங்கி வருகிறார்.

மகீஷ் தீக்சனா கடந்த ஆண்டே சிஎஸ்கே அணியில் நெட் பவலராக இருந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

சூர்யகுமாருக்கு காயம்.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.. டி20 உலக கோப்பை தொடருக்கும் சந்தேகம்சூர்யகுமாருக்கு காயம்.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.. டி20 உலக கோப்பை தொடருக்கும் சந்தேகம்

107 கிலோ உடல் எடை

107 கிலோ உடல் எடை

தீக்சனாவுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. காலம் மாற, கிரிக்கெட்டுக்கும் உடல் தகுதி ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. இதனால் 2017, 2018ஆம் ஆண்டிலேயே அண்டர் 19 கிரிக்கெட்டில் தேர்வாகி, தீக்சனா ஒரு போட்டியல் கூட விளையாடவில்லை. அதற்கு காரணம் அவர் உடல் எடை தான்.

வாட்டர் பாய்

வாட்டர் பாய்

107 கிலோ உடல் எடை, மாமிச மலை போல் தோற்றம் இருந்ததால் தீக்சனாவுக்கு விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. எப்போதும் வாட்டர் பாயாக தான் தீக்சனாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தி இருக்கிறது. தண்ணீர் எடுத்துக்கிட்டு ஓடு அப்போதாவது எடை குறையட்டும் என்று கிண்டல் வார்த்தையையும் தீக்சனா கேட்டுள்ளார்.

வலைப் பயிற்சி பவுலர்

வலைப் பயிற்சி பவுலர்

இதனால் கடின உடல் பயிற்சி மூலம் தீக்சனா உடல் எடையை குறைத்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. அடுத்தடுத்து வருடங்களில் இலங்கை அணியில் விளையாட வாய்ப்பு, டி20 உலககோப்பையில் களமிறங்க வாய்ப்பு என எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைப் பயிற்சி பவுலராக கடந்த ஆண்டு இணைந்தார்

கனவுகள் மெயப்படும்

கனவுகள் மெயப்படும்

ஆனால், இம்முறை மெயின் அணியில் ஏலத்தில் தேர்வாகி தோனியின் துருப்பு சீட்டாக தீக்சனா விளங்குகிறார். இது குறித்து பேசிய தீக்சனா, தன்னம்பிக்கையுடன் போராடி, முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். கனவுகள் மெயப்படும் என்று கூறினார். திக்சனாவை சிஎஸ்கே தேர்வு செய்த போது, அதற்கு தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தற்போது அவர் வெற்றி கண்டுள்ளார்.

Story first published: Tuesday, May 10, 2022, 18:14 [IST]
Other articles published on May 10, 2022
English summary
IPL 2022 – CSK Bowler Maheesh Theekshana interview on his cricket struggle107 கிலோ உடல் எடை.. விளையாட வாய்ப்பு கிடைக்காது.. வாட்டர் பாயாக இருந்தேன்.. சிஎஸ்கே வீரரின் கதை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X