தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக தான் சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரை விட்டு வெளியேறுகிறது.

மேலும் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், தொடரை வெற்றியுடன் சிஎஸ்கே முடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சொதப்பினால் ஒத்துக்கனும்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ருத்துராஜ்..சிஎஸ்கே தோல்வி குறித்து விளக்கம்சொதப்பினால் ஒத்துக்கனும்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ருத்துராஜ்..சிஎஸ்கே தோல்வி குறித்து விளக்கம்

ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு

ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டி என்பதால், அடுத்த சீசனை மனதில் வைத்து கொண்டே இன்றைய போட்டியில் அணி தேர்வு நடைபெறும். உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பிராவோ உள்ளிட்ட வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் இடம் கிடைப்பது சந்தேகமே. அதே போல் நடப்பு சீசனில் களமே இறங்காத ஹங்கர்கேகர் இன்றைய ஆட்டத்தில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

தோனிக்கு கடைசி போட்டி?

தோனிக்கு கடைசி போட்டி?

தோனிக்கு அடுத்த சீசன் வந்தால் வயது 41 ஆகி விடும். அப்போது இதே போல் பேட்டிங் விளையாடுவது என்பது மிகவும் கடினம். இதனால் தோனியை களத்தில் மஞ்சள் ஜெர்சியுடன் கடைசியாக பார்ப்பது இன்று தானா என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஏற்கனவே சோகத்தில் உள்ளனர். 2020, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் கேடைசி ஆட்டத்தின் போது தோனி தனது எதிர்கால திட்டத்தை குறித்து அறிவிப்பார்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

அந்த வகையில், இன்றைய ஆட்டத்தின் முடிவில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா இல்லை மீண்டும் விளையாடுவாரா என்று தெரிய வாய்ப்புள்ளது.மறுபுறம் ராஜஸ்தான் அணிக்கும், லக்னோ அணிக்கும், இன்றைய ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியம். ஏன் என்றால் யார் 2வத இடத்தில் நீடிப்பது என்பது சிஎஸ்கேவின் தயவில் தான் தெரியவரும்.

சிஎஸ்கேக்கு எளிதல்ல

சிஎஸ்கேக்கு எளிதல்ல

ஒரு வேலை சிஎஸ்கே வென்றால் லக்னோ 2வது இடத்தில் நீடிக்கும், ஒரு வேலை ராஜஸ்தான் வென்றால் , ராஜஸ்தான் 2வது இடத்துக்கு சென்றுவிடும். ஜாஸ் பட்லர், படிக்கல், சஞ்சு சாம்சன், ஹேட்மயர் போன்ற பேட்டிங் வரிசையையும், அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா, பவுல்ட் போன்றவர்களின் பந்துவீச்சையும் சமாளிப்பது சிஎஸ்கேக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022- CSK Playing their Last match of the season Vs RR தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
Story first published: Friday, May 20, 2022, 13:47 [IST]
Other articles published on May 20, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X