For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி வென்றால் 8 அணிக்கு நல்லது.. நடப்பு சீசனின் முக்கிய போட்டி.. ராஜஸ்தானை பழித்தீர்க்குமா டெல்லி

மும்பை: ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த முறை இரு அணிகளும் மோதிய போது, நோ பால் தரவில்லை என்று நடுவரிடம் டெல்லி அணி மோதலில் ஈடுபட்டது.

அதன் பிறகு, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. டெல்லி அணி பேட்டிங் பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது.

இதுல்லாம் வேலைக்கே ஆகாதுப்பா.. ரிஷப் பண்ட்க்கு ரவி சாஸ்த்ரி அட்வைஸ்.. நெருக்கடியில் டெல்லி அணிஇதுல்லாம் வேலைக்கே ஆகாதுப்பா.. ரிஷப் பண்ட்க்கு ரவி சாஸ்த்ரி அட்வைஸ்.. நெருக்கடியில் டெல்லி அணி

பழித்தீர்க்குமா டெல்லி?

பழித்தீர்க்குமா டெல்லி?

தற்போது, இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் முக்கிய கட்டத்தில் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் முனைப்புடன் டெல்லி அணி உள்ளது. ராஜஸ்தான் அணியில் ஷிம்ரன் ஹேட்மயர் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. டெல்லி அணியில் இன்றைய ஆட்டத்தில் பிரித்வி ஷா அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

ராஜஸ்தான் அணி 11 போட்டியில் விளையாடி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டியில் விளையாடி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியின் முடிவு நடப்பு சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்லி அணி எஞ்சிய 3 போட்டியிலும் வென்றால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

8 அணிக்கு சாதகம்

8 அணிக்கு சாதகம்

இந்த ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால், டெல்லி, குஜராத், லக்னோ,பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், கேகேஆர், சிஎஸ்கே என 8 அணிகளுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக பெங்களூரு அணி முதல் 2 இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதே ராஜஸ்தான் வென்றால், ராஜஸ்தானுக்கும், பெங்களூரு அணிக்கும் மட்டுமே சாதகமாக அமையும்.

Recommended Video

Maheesh Theekshana-வின் நம்பமுடியாத Weight Loss! Fitness Transformation கதை | OneIndia Tamil
டெல்லி Vs ராஜஸ்தான்

டெல்லி Vs ராஜஸ்தான்

இதனால் சிஎஸ்கே உள்ளிட்ட மற்ற அணி ரசிகர்கள் டெல்லி அணி இன்று வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி சிஎஸ்கேவிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் திருப்பி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் ரிஷப் பண்ட் படை உள்ளது. இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் டெல்லி அணி 12 முறையும், ராஜஸ்தான் 13 முறையும் வென்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 9 போட்டியில் டெல்லி அணி 6 போட்டியில் வென்றுள்ளன.

Story first published: Wednesday, May 11, 2022, 13:52 [IST]
Other articles published on May 11, 2022
English summary
IPL 2022 – DC vs RR – DC Win will help 8 teams for playoff race டெல்லி வென்றால் 8 அணிக்கு நல்லது.. நடப்பு சீசனின் முக்கிய போட்டி.. ராஜஸ்தானை பழித்தீர்க்குமா டெல்லி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X