அமித்ஷா வந்ததும் டக் டக்குனு விழுந்த விக்கெட்.. 10 நிமிடத்தில் மாறிய ஆட்டம்.. கிரிக்கெட்டில் மேஜிக்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணி படுதோல்வியை தழுவியது. ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கப்பட்டது.

ஆனால் உப்பு சப்பு இல்லாமல் போட்டி, ஒன் சைடாக மாறியதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களுக்கு இந்தப் போட்டி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

“2 - 3 ஆண்டுகளின் தவிப்பு இது” ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் உருக்கம்.. தோல்விக்கு என்ன காரணம்?? “2 - 3 ஆண்டுகளின் தவிப்பு இது” ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் உருக்கம்.. தோல்விக்கு என்ன காரணம்??

இதனால் மீம்ஸ்கள் கூட கண்ணில் அதிகமாக படாத நிலையில், அமித்ஷாவின் வருகை அவர்களுக்கு ஒரு கண்டென்டாக மாறியது.

அமித்ஷா வருகை

அமித்ஷா வருகை

ஐபிஎல் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கி சில நிமிடங்கள் கழித்து தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் வந்து போட்டியை ரசிகர்களுடன் அமர்ந்த கண்டு களித்தார். அதுவரைக்கும் நன்றாக விளையாடிய ராயல்ஸ், அமித்ஷா வந்ததும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அமித்ஷா மேஜிக்

அமித்ஷா மேஜிக்

பொதுவாக தேர்தலில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கு காரணம் அமித்ஷாவின் மேஜிக் தான் என்று பா.ஜ.க.வினர் புகழ்ந்து வருவது வழக்கம். அதே மாதிரி, அமித்ஷா வந்ததும் நன்றாக விளையாடிய ராஜஸ்தான் டக், டக்குனு விக்கெட்டுகளை பறிகொடுத்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டனர். இதனால் கிரிக்கெட்டிலும் அமித்ஷா மேஜிக் நிகழ்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ரசித்த அமித்ஷா

ரசித்த அமித்ஷா

குஜராத் அணி விக்கெட் எடுக்கும் போது எல்லாம் அமித்ஷா அதனை கைத்தட்டி கொண்டாடினார். குஜராத் தனது சொந்த மாநிலம் என்பதால் அமித்ஷாவும் குஜராத்துக்கு தான் ஆதரவாக நேற்று மைதானத்துக்கு வந்திருந்தது தெளிவானது. போட்டி ஒடி கொண்டுக்கும் போது நிமிடத்திற்கு நிமிடத்திற்கு ஒரு முறை அமித்ஷாவை பெரிய திரையில் காட்டி கொண்டே இருந்தனர்.

Recommended Video

Ashwin-க்கு எதிராக Sai Kishore-ஐ பயன்படுத்திய Hardik Pandya
பிரதமர் மோடி வரவில்லை

பிரதமர் மோடி வரவில்லை

எனினும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்காததற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் திரண்டு இருந்தனர். இந்த நேரத்தில் பிரதமரும் மைதானத்துக்கு வந்திருந்தால், மக்கள் வெளியேறும் போது சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கூட தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022 – High Profile Persons including Amit shah in the attendance for final அமித்ஷா வந்ததும் டக் டக்குனு விழுந்த விக்கெட்.. 10 நிமிடத்தில் மாறிய ஆட்டம்.. கிரிக்கெட்டில் மேஜிக்
Story first published: Monday, May 30, 2022, 11:30 [IST]
Other articles published on May 30, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X