For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவமே.. மொய் பணம் மாதிரி 101 ரன்னில் சுருண்ட கேகேஆர்.. சிஎஸ்கேக்கு சாதகமான ரிசல்ட்

புனே: ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இதில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா பெரிய தோல்வியை தழுவியது சிஎஸ்கேக்கு சாதகமாக அமைந்தது.

இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியில் ஆவேஷ் கான் பிளேயிங் லெவனில் இரும்பினார். டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடருக்கு திரும்ப வரும் கிறிஸ் கெயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மரியாதை தரலனு புகார்ஐபிஎல் தொடருக்கு திரும்ப வரும் கிறிஸ் கெயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மரியாதை தரலனு புகார்

டைமண்ட் டக்

டைமண்ட் டக்

தொடக்க வீரராக குயின்டன் டி காக், கேஎல் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் கேஎல் ராகுல் டைமண்ட் டக் அவுட் ஆனார். அதாவது ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தால் அதன் பெயர் டைமண்ட் டக். குயின்டக் டி காக் 29 ரன்களில் அரைசதமும், தீபக் 27 பந்துகளில் 41 ரன்களும் அடித்து இருந்த நிலையில் இருவரும் முறையே நரைன், ரஸில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

177 இலக்கு

177 இலக்கு

பொறுமையாக விளையாடிய குர்னல் பாண்டியா 27 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 14 பந்துகளில் 28 ரன்கள் அவர் அடித்தார். இதில் 3 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இறுதியில் ஜேசன் ஹோல்டர் மட்டும் அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள் விளாசினார். 4 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் பெவிலியன் திரும்பினார். இதனால் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பாபா இந்தரஜித் டக் அவுட்டாக, ஆரோன் பிஞ்ச் 14 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், நிதிஷ் ரானா 2 ரன்களிலும் , ரிங்கு சிங் 6 ரன்களிலும் என்று வந்த வேகத்தில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி தோல்வி அங்கேயே உறுதி ஆகிவிட்டது.

Recommended Video

IPL 2022: Salesmenஆக மாறும் Commentators! Star Sportsக்கு எதிர்ப்பு | OneIndia Tamil
101 ரன்னில் சுருண்டது

101 ரன்னில் சுருண்டது

எனினும் ரஸில் தனி ஆளாக நின்று போராடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். நரைன் 22 ரன்கள் வரை தாக்குப் பிடிக்க மற்றவர்கள் சொதப்பியதால் கொல்கத்தா அணி 14.3வது ஓவரிலேயே 101 ரன்களில் சுருண்டது. மொத்தம் 8 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். லக்னோ வீரர் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ முதலிடத்தை பிடித்தது.

Story first published: Saturday, May 7, 2022, 23:29 [IST]
Other articles published on May 7, 2022
English summary
IPL 2022- KKR all out for 101 runs vs Lucknow101 ரன்னில் சுருண்ட கேகேஆர்.. சிஎஸ்கேக்கு சாதகமான ரிசல்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X