For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: “அந்த 10 பேர்.. மெகா ஏலத்தில் பணத்தை வாரி இரைக்க துடிக்கும் அணிகள்.. அவ்வளவு ஸ்பெஷலா?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 வீரர்களுக்காக அனைத்து அணிகளுமே பணத்தை வாரி வழங்க தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

IPL 2022 Auction: Gambhir Reveals Lucknow's Strategy | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு மாறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் 10 மிக முக்கியமான வீரர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“அந்த 3 இடங்களில் தான் ஐபிஎல் போட்டிகள்”.. இந்தியாவின் முக்கிய இடங்கள் தேர்வு.. பிசிசிஐ இறுதி முடிவு “அந்த 3 இடங்களில் தான் ஐபிஎல் போட்டிகள்”.. இந்தியாவின் முக்கிய இடங்கள் தேர்வு.. பிசிசிஐ இறுதி முடிவு

இஷான் கிஷான்

இஷான் கிஷான்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஓப்பனராக இருந்த இஷான், வேறு வழியின்றி கழட்டிவிடப்பட்டுள்ளார். மும்பை அணியின் அடுத்த கேப்டனாகவே இவர் டார்கெட் செய்யப்பட்டுள்ளதால், நிச்சயம் மெகா ஏலத்தில் எடுக்க அந்த அணி முயற்சிக்கும்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

கேப்டன் பதவி கொடுக்காததால் டெல்லி அணியில் இருந்து விலகி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது இந்திய அணியில் கலக்கி வருகிறார். இன்னும் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு கேப்டன்கள் தேவைப்படுவதால் ஸ்ரேயாஸை வாங்க இந்த 3 அணிகளும் போட்டிப்போடும்.

குயிண்டன் டிகாக்

குயிண்டன் டிகாக்

தென்னாப்பிரிக்க வீரரான டிகாக், மும்பை அணிகாக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். இதுமட்டுமல்லாமல் ரோகித்துடன் அவருக்கு நிலையான பார்ட்னர்ஷிப் இருப்பதால் மும்பை அணி நிச்சயம் டிக்காக்கை ஏலம் எடுக்க கடுமையாக போட்டிப்போடும்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தமிழகத்தை சேர்ந்த அதிரடி புயலாக இருக்கும் இவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது. சையது முஷ்டக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் இவரின் அதிரடிகளே தமிழக அணிக்கு வெற்றி தேடித்தந்தது. இதனால் இவரை தட்டித்தூக்க அனைத்து அணிகளும் போட்டிப்போடுகின்றன.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

2021ம் ஆண்டு தொடரில் 16 போட்டிகளில் 24 விக்கெட்களை கைப்பற்றி கவனம் ஈர்த்த இவரை டெல்லி அணி கழட்டிவிட்டுள்ளது. அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் மெகா ஏலத்தில் அதிக மதிப்புடையவராக இருக்கலாம்.

தீபக் சஹார்

தீபக் சஹார்

தோனிக்கு கீழ் பணியாற்றிய தீபக் சஹார், பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதில் புகழ்பெற்றவர். இதுமட்டுமல்லாமல் தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் அட்டகாசமான பேட்டிங்கை செய்து ஆல்ரவுண்டராக திகழ்கிறார். எனவே கடைசி வரிசையில் கூட பேட்ஸ்மேன் தேவை என அனைத்து அணிகளும் இவரை ஏலம் எடுக்க முயலும். குறிப்பாக சிஎஸ்கே அணியே மீண்டும் முயற்சிக்கும்.

ககிஸ்கோ ரபாடா

ககிஸ்கோ ரபாடா

டெல்லி கேப்பிடல்ஸ் அணி செய்த மிகப்பெரிய தவறாக ரபாடாவை கழட்டிவிட்டது பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் விக்கெட் எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான இவரை எவ்வளவு பணம் செலவளித்தாவது ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல்

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி அசத்தியவர் ஹர்ஷப் பட்டேல். ஒரே ஒரு தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி வியக்கவைத்த இவர் அனைத்து அணிகளாலும் குறி வைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக இவரின் ஸ்லோ பால்களுக்கு பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர்.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

36 வயதாகும் ஷிகர் தவான், தன்னால் என்ன முடியும் என்பதை தென்னாப்பிரிக்க தொடரில் நிரூபித்துவிட்டார். இதனால் அவரின் வயதை பொருட்படுத்தாமல் பல்வேறு அணிகளும் பணத்தை வாரி வழங்க அணிகள் துடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த வார்னருக்கு கடந்த 2021ம் ஆண்டு மோசமாக அமைந்தது. பதவி நீக்கம் செய்யப்பட்டு, ப்ளேயிங் 11ல் இருந்தே நீக்கப்பட்டார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் "தொடர் நாயகன்" விருதை பெற்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். எனவே அவரை கேப்டனாக நியமிக்க பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணி, ஆர்சிபி போன்ற அணிகள் கடுமையாக போராடும்.

Story first published: Friday, January 28, 2022, 18:43 [IST]
Other articles published on Jan 28, 2022
English summary
Top 10 Valuable Players in IPL 2022 Mega Auction, All the IPL teams eager to pick them
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X