For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

14 பந்துகளில் அரைசதம்... மும்பைக்கு ஒரே ஓவரில் முடிவு கட்டிய பேட் கம்மின்ஸ்.. கொல்கத்தா அபார வெற்றி!

மும்பை: பேட் கம்மின்ஸ் ஆடிய ருத்ர தாண்டவத்தால் மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டமான இந்த போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இரு பெரும் சிங்கங்கள் எண்ட்ரி.. பேபி டிவில்லியர்ஸும் வருகை.. களைக்கட்டும் மும்பை - கொல்கத்தா போட்டி!இரு பெரும் சிங்கங்கள் எண்ட்ரி.. பேபி டிவில்லியர்ஸும் வருகை.. களைக்கட்டும் மும்பை - கொல்கத்தா போட்டி!

 தொடக்கமே சரிவு

தொடக்கமே சரிவு

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 3 ரன்களுக்கும், இஷான் கிஷான் 14 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். வழக்கம் போல கொல்கத்தாவுக்கு பவர் ப்ளேவில் விக்கெட் எடுத்து தந்தார் உமேஷ் யாதவ். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய இளம் வீரர் டேவால்ட் பிரேவிஸ் சற்று அதிரடி காட்டினார். எனினும் அவரின் பாட்ஷா நீண்ட நேரம் பழிக்கவில்லை. 19 பந்துகளில் 29 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார்.

 மிடில் ஆர்டர் பலம்

மிடில் ஆர்டர் பலம்

இதனால் 11 ஓவர்களில் 55 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக தடுமாறியது. அப்போது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்களை சேர்த்தார். ஸ்கோர் 130+ ஐ தாண்டிய போது, வந்த பொல்லார்ட் கடைசி நேரத்தில் 5 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

டாப் ஆர்டர் சொதப்பல்

டாப் ஆர்டர் சொதப்பல்

இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி தான். ரகானே (7), ஸ்ரேயாஸ் ஐயர் ( 10 ), சாம் பில்லிங்ஸ் (17), நிதிஷ் ராணா (8), ஆண்ட்ரே ரஸல் (11) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் தூண் போன்று நின்றிருந்த ஓப்பனிங் வீரர் வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்களை அடித்தார்.

Recommended Video

IPL 2022 MI vs KKR Match Talking Points | Cummins | Daniel Sams | Suryakumar | OneIndia Tamil
கம்மின்ஸ் ருத்ரதாண்டவம்

கம்மின்ஸ் ருத்ரதாண்டவம்

இதனால் கடைசி 37 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது. நம்பிக்கையாக வெங்கடேஷ் ஐயர் மட்டுமே இருந்தார். அப்போது களத்திற்கு வந்த பேட் கம்மின்ஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, மும்பை அணியை விழிப்பிதுங்க வைத்தார். டேனியல் சாம்ஸ் வீசிய 16 ஓவரில் மட்டும் 6,4,6,6,N2, 4,6 என மொத்தமாக 35 ரன்களை பறக்கவிட்டார். இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் எல்லாம் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்து வெற்றி அபார வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, April 6, 2022, 23:18 [IST]
Other articles published on Apr 6, 2022
English summary
IPL 2022: Pat cummins 14 balls fifty helps KKR to beat MI by 5 wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X