For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தக்கவைக்கப்படும் முக்கிய ஆல்ரவுண்டர்”.. மும்பை வீரர் கொடுத்த திடீர் ட்விஸ்ட்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் நிச்சயம் ட்விஸ்ட் கொடுக்கும் என அந்த அணிக்காக விளையாடிய மெக்லனெகன் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த முறை 2 புதிய அணிகளும் வருவதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதனால் யாரை தேர்ந்தெடுப்பது என அணிகள் குழம்பியுள்ளன.

டெல்லி அணியின் ஸ்டார் வீரருக்கு குறி வைக்கும் மும்பை.. சோகத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ்.. டெல்லி அணியின் ஸ்டார் வீரருக்கு குறி வைக்கும் மும்பை.. சோகத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ்..

 மும்பை அணி திட்டம்

மும்பை அணி திட்டம்

அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி முதன்மை தேர்வாக கேப்டன் ரோகித் சர்மாவை வைத்துள்ளது. அவருக்கு அடுத்ததாக இளம் வீரர் இஷான் கிஷான் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தக்கவைக்கவுள்ளது. அயல்நாட்டு வீரர்களின் கணக்கில் , கெயீரன் பொல்லார்ட் தக்கவைக்கப்படவுள்ளார்.

 பாண்ட்யா சகோதரர்கள்

பாண்ட்யா சகோதரர்கள்

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல போட்டிகளை வென்றுக்கொடுத்த பாண்ட்யா சகோதரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோருக்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கியது மும்பை அணி தான். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் சரிவர பந்துவீசாததால் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மெக்லனெகன் நம்பிக்கை

மெக்லனெகன் நம்பிக்கை

இந்நிலையில் என்ன நடந்தாலும் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கும் என மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் மெக்லனெகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்ட்யா இந்த ஐபிஎல்-ல் நிச்சயம் தக்கவைக்கப்படுவார். அதில் எந்தவித சந்தேகமும் இன்றி நான் கூறுவேன். ஐபிஎல் தொடரில் அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர், பெஸ்ட் ஃபினிஷர். அவருடைய இடத்தை நிரப்ப இன்னும் தகுதியான நபர் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Recommended Video

BCCI Plan to cancel IPL Auction in Future | OneIndia Tamil
சிக்கல்

சிக்கல்

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர் மெக்லனெகன், அவர் கூறியது படி பார்த்தால் இஷான் கிஷண் கழட்டிவிடப்படுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா - இஷான் கிஷன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவது தெளிவாக தெரிகிறது.

Story first published: Tuesday, November 30, 2021, 14:51 [IST]
Other articles published on Nov 30, 2021
English summary
Mitchell McClenaghan Strongly believes that Hardik pandya will be retained by Mumbai indians
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X