இது நீலாம்பரி லெவல் திமிர்.. விமர்சனத்துக்கு காட்டமாக ரியான் பராக் பதில்.. இப்படி ஓபனா பேசிட்டாரே?

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரியான் பராக் மீது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கோபத்தில் உள்ளனர்.

Recommended Video

RR vs RCB 'karma is a boomerang' என நிரூபித்த Riyan Parag | #Cricket

21 வயதான ரியான் பராக், அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி அதன் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கியவர். பார்ப்பதற்கு அமுல் பேபி மாதிரி இருந்தாலும், ரியான் பராக் ஒரு ரவுடி பேபி.

அனைத்து ஐசிசி கோப்பையையும் வென்று தந்த 40 வயதான தோனியே களத்தில் அமைதியாக இருக்கும் போது, எதையும் சாதிக்காத ரியான் பராக் களத்தில் அடாவடியாக நடந்து கொள்கிறார் என்பது தான் ரசிகர்களின் கோபம்.

ஐபிஎல் -ல் மீண்டும் ஒரு புதிய பரிசுத்தொகை.. அதுவும் ரூ.1.25 கோடி அறிவிப்பு.. யாருக்கு தெரியுமா?? ஐபிஎல் -ல் மீண்டும் ஒரு புதிய பரிசுத்தொகை.. அதுவும் ரூ.1.25 கோடி அறிவிப்பு.. யாருக்கு தெரியுமா??

அடாவடி பராக்

அடாவடி பராக்

நடுவரிடம் கோபப்படுவது, கேட்ச் பிடித்தால் பந்தை வைத்து செல்ஃபி எடுப்பது, எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, சக அணி வீரர்களையே முறைப்பது, பேட்டிங் செய்ய வரும் போது சச்சின் சாதனையை முறியடித்தவாறு, பாவ்லா காட்டுவது என ரியான் பராக் களத்தில் செய்த அடாவடி கொஞ்சம், நஞ்சம் அல்ல.

183 ரன்கள்

183 ரன்கள்

ரியான் பராக்கிற்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை சொன்னால், அதற்கு பதிலடி தருவது போல் இன்ஸ்டாவில் பதிவிடுவது என செய்து வந்தார். ஆனால் ரியான் பராக் நடப்பு சீசனில் 14 இன்னிங்ஸ் விளையாடி 183 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 138 ஆகும். இறுதிப் போட்டியில் கூட ரியான் பராக் பேட்டிங்கில் சொதப்பினார்.

ரியான் பராக் பதிலடி

ரியான் பராக் பதிலடி

இதனால் ரியான் பராக்கை ரசிகர்கள் விமர்சித்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் பதிவு போட்டு பதிலடி தந்துள்ளார். அதில், சில சமயம், நாம் பின்நோக்கி பார்த்து சிரிக்க தான் முடியும். உலகம் உங்களை பார்த்து என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும்.ஆனால் நீங்கள் சிரியுங்கள். ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு செல்லும் போது 100 சதவீதம் நீங்கள் உங்கள் உழைப்பை கொடுத்துள்ளீர்கள் என்று நினைத்து சிரியுங்கள்.

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

எல்லாம் விஷயங்களும் நல்லதாகவே நடக்கும். கடந்த காலத்தில் செய்ய முடியவில்லையே என்று நினைத்து சிரிப்பதை மறந்துவிடாதீர்கள். எதிர்காலத்தில் நினைத்ததை செய்ய முடியும் என்று நினைத்து சிரியுங்கள். அதுவரை, பொறுத்து இருங்கள் என்று ரியான் பராக் பதிவு போட்டுள்ளார். தோனியை போல் ஐபிஎல் மட்டுமல்ல இந்தியாவுக்காகவும் பினிஷராக இருப்பேன் என்று ரியான் பராக் கூறியது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022- RR Batsman Riyan Parag answering trolls through insta post ரியான் பராக்கை ரசிகர்கள் விமர்சித்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் பதிவு போட்டு பதிலடி தந்துள்ளார்
Story first published: Wednesday, June 1, 2022, 8:07 [IST]
Other articles published on Jun 1, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X