“கொஞ்சம் அடி ஓவரோ” ரியான் பராக்கால் சர்ச்சையில் சிக்கிய சூர்யகுமார் யாதவ்.. ஒரே நாளில் அந்தர் பல்டி

மும்பை: ரியான் பராக் விஷயத்தில் ஆதரவுக் கொடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்ற ராஜஸ்தான் அணி, ஆர்சிபியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

ஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோ

 ரியான் பராக்கின் சர்ச்சை

ரியான் பராக்கின் சர்ச்சை

ப்ளே ஆஃப் சுற்றில் இந்த அணி தோல்வியடைந்ததை விட, ரியான் பராக் செய்த விஷயங்கள் தான் பரபரப்பாக பேசப்பட்டது. கேட்ச் பிடிப்பது முதல், சீனியர் வீரர்களிடம் நடந்துக்கொள்ளும் முறை வரை அவரின் செயல்பாடுகள் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. அதாவது ரியான் பராக் கேட்ச் பிடித்தால், பந்தை தரை வரை வேண்டுமென்றே கொண்டு சென்று அம்பயர்களை கிண்டலடிப்பார்.

 தவறான செயல்பாடு

தவறான செயல்பாடு

இதே போன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த தேவ்தத் பட்டிக்கலை சீனியர் வீரர் என்றும் பாராமல் களத்திலேயே திட்டினார். இதே போன்று அஸ்வினிடமும் வம்பிழுக்க முயன்றார். இன்னும் ஏதுவுமே சாதிக்காமல் இப்படி நடந்துக்கொள்வது தவறான ஒன்று என ஒருபுறம் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மற்றொரு புறம் நல்ல ஃபீல்டிங் செய்கிறார், இளம் வயதில் இப்படி செய்தால் என்ன குற்றம் என மற்றவர்கள் ஆதரவுக்கொடுத்து வருகின்றனர்.

 சூர்யகுமார் ட்வீட்

சூர்யகுமார் ட்வீட்

இந்த சண்டையில் நேற்று சூர்யகுமார் யாதவ் தலையிட்டார். இதுகுறித்து ட்வீட் போட்டிருந்த அவர், களத்தில் சிறப்பாகவும், தரமாகவும் நடந்துக் கொள்கிறீர்கள் என ஊக்குவிப்பது போன்று பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சூர்யகுமார் யாதவையும் விட்டு விளாச தொடங்கினர்.

 ஒரே நாளில் அந்தர் பல்டி

ஒரே நாளில் அந்தர் பல்டி

இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தர் பலடி அடித்துள்ளார். அதாவது, இன்று போட்ட மற்றொரு ட்வீட்டில் "ரியான் பராக் ஃபீல்டிங் சிறப்பாக செய்ததை சுட்டிக்காட்டினேன், வேறு ஒன்றும் இல்லை, பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளார். தற்போது இதனையும் ரசிகர்கள் கிண்லடித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Suryakumar Yadav on Riyan Parag's attitude ( ரியான் பராக் குறித்து சூர்யகுமார் யாதவ் ட்வீட் ) ரியான் பராக்கின் செயல்பாடுகள் குறித்து சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
Story first published: Thursday, May 26, 2022, 20:26 [IST]
Other articles published on May 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X