For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை.. கிங் கோலி திரும்ப வந்துட்டாரு.. 4வது இடத்தில் ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

Recommended Video

Virat Kohli-யின் அதிரடி! வாழ்வா சாவா போட்டியில் RCB வெற்றி | #Cricket

இதன் மூலம் விராட் கோலி தனது பழைய ஃபார்ம்க்கு திரும்பினார். பந்துகளை அடிக்க விராட் கோலி செய்த மாற்றங்கள் அவருக்கு நல்ல பலனை தந்தது.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் சுப்மான் கில் 1 ரன்னில் மேக்ஸ்வெல்லின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் அதிரடி

ஹர்திக் அதிரடி

இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாஹா மற்றும் மேத்தீவ் வேட் பொறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். அப்போது மேத்தீவ் வேட் 16 ரன்களில் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். சாஹா 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தார். இதன் பின்னர் களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியா முதலில் நிதானமாக ஆடி, பின்னர் அதிரடியை காட்டினார்.

169 ரன்கள் இலக்கு

169 ரன்கள் இலக்கு

அவருக்கு டேவிட் மில்லர் நல்ல துணையாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவாட்டியா 2 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, ரஷித் கான் 6 பந்தில் 2 சிக்சர் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

கிங் கோலி சாதனை

கிங் கோலி சாதனை

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விராட் கோலி, டுபிளஸிஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. பெரிய வீரர்கள் எப்போதுமே, அணி நெருக்கடியாக இருக்கும் போது தான் பெரிய இன்னிங்ஸ் ஆடி வெற்றியை தேடி தருவார்கள். நடப்பு சீசன் முழுவதும் பேட்டிங் செய்ய திணறிய கோலி, இம்முறை முதல் பந்தில் இருந்தே அதிரடியை காட்டினார். பேட் பிடிக்கும் கிரிப்பில் மாற்றம், பந்துகளை எதிர்கொள்ளும் போது காட்டிய ஃபுட் ஓர்க் என்று அனைத்திலும் கோலி மெருகேற, பழைய அதிரடி கோலியை காண முடிந்தது. இந்த இன்னிங்சில் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 7 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

ஆர்சிபி வெற்றி

ஆர்சிபி வெற்றி

வேகப்பந்துவீச்சு, சுழற்பந்த என தொடக்கத்தில் இருந்ததே அட்டாக் செய்த கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். டுபிளஸிஸ் 40 ரன்கள் சேர்க்க, இறுதியில் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதனால் 18.4வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை பெங்களூரு எட்டியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு சென்றத. தற்போது டெல்லி தோற்றால், ஆர்சிபி பிளே ஆப்க்கு சென்றுவிடும்.

Story first published: Thursday, May 19, 2022, 23:50 [IST]
Other articles published on May 19, 2022
English summary
IPL 2022- Virat Kohli brilliant innings put RCB in top 4 டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை.. கிங் கோலி திரும்ப வந்துட்டாரு.. 4வது இடத்தில் ஆர்சிபி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X