ஹே கேல் ஹை ஷேர் ஜவானோங்கா.. வைரலாகும் ஐபிஎல் கீதம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை: ஐபிஎல் 11வது சீசன் ஜூரம் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் டெம்பரேச்சரை எகிற வைக்கும் வகையில், அதிரடியான, ஐபிஎல் ஆந்தம் எனப்படும் ஐபிஎல் குறித்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது.

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன், ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.

IPL anthem viral

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 11வது சீசனில் விளையாட உள்ளன. இதனால், இந்த ஆண்டு போட்டி ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் ஏலத்தில், கேப்டன் கூல் டோணியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஐபிஎல் போட்டிக்கான, ஒரு தீம் மியூசிக் மட்டுமே இருந்து வந்தது. முதல் முறையாக, இந்த சீசனில், ஐபிஎல் போட்டிக்கான ஆந்தம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஹே கேல் ஹை ஷேர் ஜவானோங்கா’ எனப்படும் இது சிங்க வீரர்களுக்கான விளையாட்டு என்று துவங்கும் பாடல், பட்டித் தொட்டியெல்லாம் வேகமாக பரவி வருகிறது.

ஜிமிக்கி கம்மல், புருவப் போட்டி பிரியா வாரியர் என்று இணையதளத்தில் தேடிய கைகள் எல்லாம், ஐபிஎல் ஆந்தம் பாடலை தற்போது தேடுகின்றன.

பெஸ்ட் வர்சஸ் பெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தம், ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு என, பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்க திரைப்பட இயக்குநர் டான் மேஸ், இசையமைப்பாளர் ராஜூவ் பல்லா இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆந்தம் பாடலை, சித்தார்த் பாஸ்ருர், அனைத்து மொழிகளிலும் கணீர் குரலில் பாடியுள்ளார்.

Story first published: Tuesday, March 13, 2018, 11:44 [IST]
Other articles published on Mar 13, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற