ஐபிஎல் 2020 ஏலம் LIVE: 140.30 கோடிக்கு வாங்கிய அணிகள்.. ஏலம் நிறைவு!

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலம் துவங்கி நடைபெற்று வருகிறது.

2020 சீசனுக்காக சிஎஸ்கே உட்பட 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. மொத்தம் 338 வீரர்கள் ஏலம் போகிறார்கள். இதில் மொத்தம் 73 வீரர்களுக்கான இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். இதில் 29 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும்.

சிம்ரான் ஹெட்மேயர், மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏலம் போகிறார்கள். சென்னை அணி 5 இடங்களை இன்னும் நிரப்பிக் கொள்ளலாம். சென்னையிடம் மிகவும் குறைவாக 14.60 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

09:04 pm

2020 ஐபிஎல் ஏலம் முடிவுக்கு வந்தது

09:04 pm

இந்த ஏலத்தில் 62 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர்

09:04 pm

29 வெளிநாட்டு வீரர்கள் கோடிக்கணக்கான தொகைக்கு வாங்கப்பட்டனர்

09:04 pm

இந்த ஏலத்தில் 8 அணிகளும் 140.30 கோடி செலவு செய்துள்ளது

08:52 pm

லலித் யாதவ்வை 20 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி

08:52 pm

ஷபாஸ் அஹ்மதை 20 லட்சத்திற்கு வாங்கியது பெங்களூர்

08:51 pm

நிகில் நாயக்கை 20 லட்சத்திற்கு வாங்கியது கொல்கத்தா

08:51 pm

டாம் கர்ரன்-ஐ 1 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்

08:50 pm

டேல் ஸ்டெய்ன் பெங்களூர் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார் ஆண்ட்ரூ டை 1 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்

08:27 pm

மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ 4.80 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி

08:25 pm

பஞ்சாப் அணி சிம்ரன் சிங்கை 55 லட்சத்திற்கு வாங்கியது ஆர் சாய் கிஷோரை சிஎஸ்கே அணி 20 லட்சத்திற்கு வாங்கியது

08:19 pm

பெங்களூர் அணி பவன் தேஷ்பாண்டேவை 20 லட்சத்திற்கு வாங்கியது

08:19 pm

மோஹித் சர்மாவை 50 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி

08:17 pm

சஞ்சய் யாதவ்வை 20 லட்சத்திற்கு வாங்கியது ஹைதராபாத்

08:16 pm

பிரின்ஸ் பல்வந்த் ராயை 20 லட்சத்திற்கு வாங்கியது மும்பை

08:16 pm

அனிருத்தா ஜோஷி-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது ராஜஸ்தான்

08:16 pm

திக்விஜய் தேஷ்முக்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது மும்பை

08:16 pm

கொல்கத்தா அணி 20 லட்சத்திற்கு பிரவின் தம்பே-வை வாங்கியது

08:16 pm

தஜிந்தர் சிங்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது பஞ்சாப்

08:15 pm

அப்துல் சமத்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது ஹைதராபாத்

08:04 pm

கேன் ரிச்சர்ட்சனை 4 கோடிக்கு வாங்கியது பெங்களூர் அணி

08:04 pm

ஓஷேன் தாமஸ்-ஐ 50 லட்சத்திற்கு வாங்கியது ராஜஸ்தான்

07:59 pm

கிறிஸ் ஜோர்டானை 3 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

07:58 pm

டாம் பான்டன்-ஐ 1 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

07:58 pm

பாபியன் ஆலன் 50 லட்சத்திற்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்

07:58 pm

ஜோஷ் பிலிப்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது பெங்களூர்

07:57 pm

மொஹ்சின் கான்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது மும்பை

07:52 pm

கிறிஸ் க்ரீன்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது கொல்கத்தா

07:52 pm

பவனகா சந்தீப்பை 20 லட்சத்திற்கு வாங்கியது ஹைதராபாத்

06:43 pm

ஜோஷ் ஹேசல்வுட்டை 2 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே அணி

06:43 pm
Mykhel

சௌரப் திவாரியை 50 லட்சத்திற்கு வாங்கியது மும்பை அணி

06:43 pm

மிட்செல் மார்ஷ்-ஐ 2 கோடி கொடுத்து வாங்கியது ஹைதராபாத்

06:43 pm

ஜேம்ஸ் நீஷம் 50 லட்சத்திற்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்

06:42 pm

ஷிம்ரான் ஹெட்மயர்-ஐ 7.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது

06:42 pm

டேவிட் மில்லரை 75 லட்சத்திற்கு ராஜஸ்தான் வாங்கியது

06:05 pm

உள்ளூர் வீரர் ரவி பிஸ்னோய் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்

06:05 pm

பஞ்சாப் அணி ரவி பிஸ்னோய்-ஐ 2 கோடக்கு ஏலத்தில் வாங்கியது

06:03 pm

மணிமாறன் சித்தார்த்தை 20 லட்சத்திற்கு வாங்கியது கொல்கத்தா

06:02 pm

உள்ளூர் வீரர் கார்த்திக் தியாகியை 1.30 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

06:02 pm

உள்ளூர் வீரர் இஷான் போரேல்-ஐ 20 லட்சத்திற்கு வாங்கியது பஞ்சாப்

05:56 pm

உள்ளூர் வீரர் ஆகாஷ் சிங்கை 20 லட்சத்திற்கு வாங்கியது ராஜஸ்தான்

05:56 pm

அனுஜ் ராவத்தை 80 லட்சத்திற்கு வாங்கியது ராஜஸ்தான்

05:51 pm

உள்ளூர் வீரர் அனுஜ் ராவத்தை வாங்கியது ராஜஸ்தான்

05:51 pm

அனுஜ் ராவத்தை 80 லட்சத்திற்கு வாங்கியது ராஜஸ்தான்

05:50 pm

டேனியல், பவன் தேஷ்பாண்டே ஏலம் போகவில்லை

05:50 pm

ஷாருக் கான் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை

05:50 pm

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஐ 2.40 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது

05:42 pm

தீபக் ஹூடா 50 லட்சத்திற்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்

05:42 pm

வருண் சக்கரவர்த்தியை 4 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா

05:40 pm

விராட் சிங் 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்

05:40 pm

ப்ரியம் கார்க் 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்

05:32 pm

ரோகன் கடம், ஹர்ப்ரீத் சிங் ஏலத்தில் வாங்கப்படவில்லை

05:32 pm

ராகுல் திரிபாதி 60 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்

05:21 pm

ஆடம் சாம்பா, ஹெய்டன் வால்ஷ், ஜாகிர் கான் ஏலம் போகவில்லை

05:16 pm
Mykhel

சிஎஸ்கே அணி 6.75 கோடிக்கு பியுஷ் சாவ்லாவை வாங்கியது

05:16 pm

இஷ் சோதியை எந்த அணியும் வாங்கவில்லை

05:13 pm
Mykhel

ஷெல்டன் காட்ரல்-ஐ 8.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி

05:13 pm

பியுஷ் சாவ்லாவை வாங்க சிஎஸ்கே, பஞ்சாப் கடும் போட்டி

05:08 pm

டிம் சவுதி-ஐ எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை

05:08 pm

ஷெல்டன் காட்ரல்-ஐ வாங்க பஞ்சாப், டெல்லி கடும் போட்டி

05:07 pm

நாதன் கோல்டர் நைல்-ஐ 8 கோடிக்கு வாங்கியது மும்பை

05:07 pm

சிஎஸ்கேவுடன் போட்டி போட்டு கோல்டர் நைல்-ஐ வாங்கியது மும்பை

05:02 pm
Mykhel

ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை-ஐ எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை

05:01 pm
Mykhel

ஜெயதேவ் உனட்கட்-ஐ 3 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்

05:01 pm

குசால் பெரேரா, ஷாய் ஹோப்பை எந்த அணியும் வாங்கவில்லை

05:00 pm

மோஹித் சர்மாவை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை

05:00 pm

டேல் ஸ்டெய்ன் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை

04:56 pm
Mykhel

அலெக்ஸ் கேரி-ஐ 2.40 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது

04:56 pm

தென்னாப்பிரிக்க வீரர் கிளாசனை எந்த அணியும் வாங்கவில்லை

04:56 pm

முஷ்பிகுர் ரஹீம், ஓஜா ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை

04:25 pm

ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் வாங்கவில்லை

04:25 pm

கிறிஸ் மோரிஸ் 1.50 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.

04:17 pm
Mykhel

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன்-ஐ வாங்க சிஎஸ்கே ஆர்வம்

04:16 pm

சாம் கர்ரன்-ஐ வாங்க சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோதல்

04:16 pm

சாம் கர்ரன்-ஐ 5.50 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே

04:16 pm

ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 15.50 கோடிக்கும் வாங்கப்பட்டார்

04:15 pm

கொல்கத்தா அணி அவரை 15.50 கோடிக்கு வாங்கியது

04:09 pm
Mykhel

பாட் கம்மின்ஸ்-ஐ வாங்க 12 கோடிக்கும் அதிகமாக ஏலம் கேட்கப்பட்டது

04:07 pm

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்-ஐ வாங்க கடும் போட்டி

04:07 pm

டெல்லி, பெங்களூர் அணிகள் கம்மின்ஸ்-ஐ வாங்க மோதுகின்றன

04:05 pm

நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம்-ஐ எந்த அணியும் வாங்கவில்லை

04:05 pm

ஆல்-ரவுண்டர் யூசுப் பதானை எந்த அணியும் வாங்கவில்லை

04:04 pm

இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார்

04:04 pm
Mykhel

டெல்லி அணி கிறிஸ் வோக்ஸ்-ஐ போட்டியின்றி வாங்கியது

04:02 pm

மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்

03:58 pm
Mykhel

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்-ஐ வாங்க கடும் போட்டி

03:58 pm

பஞ்சாப், டெல்லி அணிகள் விடாப்பிடியாக போட்டி போடுகின்றன

03:58 pm

9 கோடியை தாண்டி மேக்ஸ்வெல் விலை எகிறி வருகிறது

03:55 pm

ஆரோன் பின்ச்-ஐ 4.40 கோடி கொடுத்து வாங்கியது பெங்களூர் அணி

03:51 pm
Mykhel

ஆரோன் பின்ச்சை வாங்க கடும் போட்டி நிலவுகிறது

03:50 pm

பெங்களூர், கொல்கத்தா ஆரோன் பின்ச்சை வாங்க போட்டி போடுகின்றன

03:48 pm
Mykhel

டெஸ்ட் வீரர் புஜாராவை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை

03:48 pm
Mykhel

ஜேசன் ராய்-ஐ 1.50 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் வாங்கியது

03:47 pm
Mykhel

கிறிஸ் லின்-ஐ 2 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்

03:46 pm

ராபின் உத்தப்பாவை 3 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்

03:46 pm

ஹனுமா விஹாரியை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை

03:43 pm

இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனை 5.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

03:22 pm

கடந்த ஏலம் போலவே சிஎஸ்கே அணி இந்த முறையும் ஏலத்தில் பெரும்பாலான நேரம் அமைதி காக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

03:22 pm

சிஎஸ்கே அணியிடம் 14.60 கோடி மட்டுமே தொகை உள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாது.

03:22 pm

ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி துவக்க வீரர் ஒருவர் மற்றும் வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர் ஒருவரையும் குறி வைக்கும்.

03:01 pm
Mykhel

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் அதிக விலைக்கு ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

02:35 pm

இன்று ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கும் நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார்

04:23 am

சென்னையிடம் 14.60 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது

04:23 am

சென்னை அணி இன்னும் 5 இடங்களை நிரப்பிக் கொள்ளலாம்

04:23 am

மொத்தம் 332 வீரர்கள் இதில் ஏலம் போகிறார்கள். இதில் மொத்தம் 73 வீரர்களுக்கான இடங்களை மட்டுமே நிரப்ப முடியும். இதில் 29 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும்.

04:23 am

ஐபிஎல் 2020 சீசனுக்காக சிஎஸ்கே உட்பட 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது

04:22 am

ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது

IPL Auction 2020 LIVE UPDATES: Kolkata will witness a mini bidding

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

 
English summary
IPL Auction 2020 LIVE UPDATES: Kolkata will witness a fun packed mini bidding.
Story first published: Thursday, December 19, 2019, 4:19 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X