இவ்வளவு பெரிய தொகையா? யாருக்கும் இல்லாத கடும் போட்டி.. ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைத்த வீரர்!

IPL AUCTION 2020 | Unsold Indian Players list

கொல்கத்தா : ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 2020 ஐபிஎல் ஏலத்தில் மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த வெளிநாட்டு வீரருக்கும் இல்லாத அளவுக்கு கம்மின்ஸ் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த ஏலத்தில் முக்கிய வீரராக கருதப்பட்டவர் பாட் கம்மின்ஸ்.

பாட் கம்மின்ஸ் ஆர்வம்

பாட் கம்மின்ஸ் ஆர்வம்

சில ஆண்டுகளாக பாட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத நிலையில், மீண்டும் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். அவருக்கு 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பெங்களூர் - டெல்லி போட்டி

பெங்களூர் - டெல்லி போட்டி

அவர் பெயர் ஏலத்தில் கூறப்பட்ட போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் கடுமையாக ஏலம் கேட்டன. இரண்டு அணிகளும் 14.75 கோடி வரை அவர் விலையை உயர்த்தின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி

அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் கேட்பதில் இருந்து பின் வாங்கியது. அப்போது உள்ளே நுழைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் அணியின் கனவை கலைத்து, கம்மின்ஸ்-ஐ 15.50 கோடிக்கு ஏலம் கேட்டு, அவரை வாங்கியது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை காலி

பென் ஸ்டோக்ஸ் சாதனை காலி

இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். அவர் 14.50 கோடிக்கு 2017ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

அவரை முறியடித்துள்ள பாட் கம்மின்ஸ் 15.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் பாட் கம்மின்ஸ் தான்.

அதிக விலை வீரர்கள்

அதிக விலை வீரர்கள்

மேலும், அதிக விலை கொடுக்கப்பட்ட வீரர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் விராட் கோலி (2018 முதல் - 17 கோடி), யுவராஜ் சிங் (2015ஆம் ஆண்டு - 16 கோடி) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

1 கோடிக்கு வாங்கியது

1 கோடிக்கு வாங்கியது

அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 1 கோடிக்கு 2014 ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. தற்போது பாட் கம்மின்ஸ் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL Auction 2020 : Pat Cummins become most expensive overseas player in IPL
Story first published: Thursday, December 19, 2019, 20:10 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X