For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10சி, 15சி! கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய பணம்.. 2 ஆஸி. வீரர்களுக்கு அமவுண்டை ஏத்தி விட்ட டெல்லி!

Recommended Video

IPL AUCTION 2020 | Unsold Indian Players list

கொல்கத்தா : ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 2020 ஐபிஎல் ஏலம் அதிர்ஷ்டம் தரும் என பலரும் ஜோசியம் கூறி வந்த நிலையில் அது உண்மை என ஏலத்தின் முதல் பகுதியிலேயே தெரிந்தது.

மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கும், பாட் கம்மின்ஸ் 15.50 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

2020 ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இறுதிப் பட்டியலில் தேர்வான 338 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

பாட் கம்மின்ஸ் முதல் முறை

பாட் கம்மின்ஸ் முதல் முறை

ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் முதன் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து ஏலத்தில் தன்னை சேர்த்துக் கொண்டார். அவரை வாங்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் வந்த மேக்ஸ்வெல்

மீண்டும் வந்த மேக்ஸ்வெல்

அதே போல, ஆஸ்திரேலிய ஆல் - ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்-லுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சமீபத்தில் மன நலம் காரணமாக தேசிய அணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

ஆனால், அதை எல்லாம் ஐபிஎல் ஏலத்துக்கு முன் உதறினார் மேக்ஸ்வெல். சமீபத்தில் உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அவரை வாங்க ஐபிஎல் அணிகளும் ஆவலாக இருந்தன.

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு போட்டி

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு போட்டி

இந்த நிலையில் ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல் பெயர் அறிவிக்கப்பட்ட போது பஞ்சாப் அணி முதலில் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. டெல்லி அணியும் கோதாவில் குதித்தது. இரண்டு அணிகளும் மாற்றி, மாற்றி தொகையை ஏற்றிக் கொண்டே சென்றன.

பரபரப்பு

பரபரப்பு

5 கோடியை தாண்டிய உடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வேறு எந்த அணியும் பஞ்சாப் - டெல்லி இடையே வரவில்லை. இந்த 10.50 கோடி வரை ஏலம் கேட்ட டெல்லி அணி, பஞ்சாப் அணி 10.75 கோடியை எட்டிய உடன் பின்வாங்கியது.

10.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்

10.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10.75 கோடிக்கு கிளென் மேக்ஸ்வெல்-ஐ வாங்கியது. இது தான் இந்த சீசனின் பெரிய ஏலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பாட் கம்மின்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டது.

கம்மின்ஸ்-க்கு கடும் போட்டி

கம்மின்ஸ்-க்கு கடும் போட்டி

இந்த முறை கம்மின்ஸ்-ஐ வாங்க பெங்களூர் அணி ஆர்வம் காட்டியது. உடனே களத்தில் குதித்த டெல்லி அணி ஏலத் தொகையை ஏற்றிக் கொண்டே சென்றது. 10 கோடியை தாண்டியும் இரு அணிகளும் மாற்றி, மாற்றி ஏலம் கேட்டு வந்தன.

கொல்கத்தா அதிரடி

கொல்கத்தா அதிரடி

14.50 கோடிக்கு பின் ஏலம் கேட்பதை நிறுத்திக் கொண்டது டெல்லி அணி. 14.75 கோடிக்கு பெங்களூர் அணி அவரை வாங்கி விடும் என எண்ணிய போது திடீரென உள்ளே வந்த கொல்கத்தா அணி 15.50 கோடி வரை ஏலம் கேட்டு பாட் கம்மின்ஸ்-ஐ வாங்கியது.

டெல்லி தான் காரணம்

டெல்லி தான் காரணம்

இந்த இரண்டு ஏலங்களிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி தான் ஏலத் தொகையை அதிகப்படுத்தி இரு அணிகளின் பர்ஸை காலி செய்தது. அந்த அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் தேவை எனும் நிலையில் அவர்களை வாங்க கடும் முயற்சி செய்தது டெல்லி.

அதிக தொகை

அதிக தொகை

பாட் கம்மின்ஸ் 15.50 கோடிக்கு ஏலம் போனதே ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கிடைத்த அதிகபட்ச தொகை ஆகும். இதற்கு முன் பென் ஸ்டோக்ஸ் 14.50 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார். அதை முறியடித்தார் பாட் கம்மின்ஸ்.

Story first published: Thursday, December 19, 2019, 18:19 [IST]
Other articles published on Dec 19, 2019
English summary
IPL Auction 2020 : Pat Cummins, Maxwell sold for huge price. Australian players ruled the first part of the auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X