ஐபிஎல் ஏலத்திற்கு தயாராக உள்ள கொல்கத்தா... 332 வீரர்களும் தயார்...

கொல்கத்தா : ஐபிஎல் ஏலம் இன்று துவங்கவுள்ள நிலையில் கொல்கத்தாவில் ஐபிஎல்லின் 8 அணிகள், ஏலத்திற்காக காத்திருக்கும் 332 வீரர்கள் என அனைவரும் முகாமிட்டுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்திற்காக 971 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 8 அணிகள் தங்களது விருப்பத்திற்குரிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து, தற்போது 332 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எட்டு அணிகளும் சேர்த்து 207.65 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளன. அதிகபட்சமாக கிங்ஸ் XI பஞ்சாப் அணி ரூ.42.70 கோடிகளுடனும் குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.13.05 கோடிகளுடனும் ஏலத்தில் பங்கேற்கின்றன.

8 அணிகள் பங்கேற்பு

8 அணிகள் பங்கேற்பு

13வது ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

971 வீரர்கள் பதிவு

971 வீரர்கள் பதிவு

ஐபிஎல் 2020க்கான ஏலம் இந்த ஆண்டு முன்னதாகவே திட்டமிடப்பட்டு இன்று நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச அளவில் 971 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

வீரர்கள்

வீரர்கள்

ஏலத்தில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து 971 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், 8 அணிகளின் விருப்பப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு, அதிலிருந்து தற்போது 332 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இதில் 143 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

ரூ.42.70 கோடியுடன் கிங்ஸ் XI பஞ்சாப்

ரூ.42.70 கோடியுடன் கிங்ஸ் XI பஞ்சாப்

இந்த ஏலத்தில் மொத்தமாக 8 அணிகளும் சேர்ந்து 207.65 கோடி ரூபாயுடன் பங்கேற்கவுள்ள நிலையில், கிங்ஸ் XI பஞ்சாப் அணி அதிகபட்சமாக 42.70 கோடி ரூபாயுடனும் குறைந்தபட்சமாக 13.05 கோடி ரூபாயுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பங்கேற்கின்றன.

ராபின் உத்தப்பாவின் அடிப்படை விலை ரூ.1.5 கோடி

ராபின் உத்தப்பாவின் அடிப்படை விலை ரூ.1.5 கோடி

இந்த ஏலத்தில் அதிகபட்ச நிர்ணயமாக 2 கோடி ரூபாய் பிரிவில் 7 வீரர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் இந்தியர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல இந்திய வீரர் ராபின் உத்தப்பா அதிகபட்ச ஆதார விலையாக 1.5 கோடி ரூபாயுடன் உள்ளார்.

நேரலையாக ஒளிபரப்பு

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் ஏலத்தின் கொண்டாட்டத்திற்காக பிரமாண்ட ஸ்டேஜ்கள் தயாராக உள்ளன. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் முதல்முறையாக நேரலையாக பிற்பகல் 3.30 மணியிலிருந்தே ஒளிபரப்ப உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kolkata is Ready for the IPL 2020 Auction today
Story first published: Thursday, December 19, 2019, 13:54 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X