ஐபிஎல் எலிமினேட்டர் - ஆட்டத்தையே மாற்றக் கூடிய 5 வீரர்கள்.. இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் எலிமினேட்டர் தொடரில் இன்று பெங்களூரு, லக்னோ அணிகள் மோதும் நாக் அவுட் ஆட்டம் நடைபெறுகிறது.

ஒருவேளை இந்த ஆட்டம் மழையால் ரத்தானால், புள்ளி பட்டியலில் முதன்மையாக இருக்கும் காரணத்தினால் லக்னோ வென்றுவிட்டதாக அறிவிக்கப்படும்.

இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய 5 வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

லக்னோ அணியின் முக்கிய பலமே கேஎல் ராகுல் தான். கம்பீரின் வருகைக்கு பிறகு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ராகுல் முதிர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 14 போட்டியில் விளையாடியுள்ள ராகுல், 537 ரன்களை விளாசியுள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். ஆனால் ராகுல் முதலில் பேட் செய்யும் போது 425 ரன்களும், 2வது பேட்டிங் செய்யும் போது 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

குயின்டன் டி காக்

குயின்டன் டி காக்

லக்னோ அணியில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை குயின்டன் டி காக் பெற்றுள்ளார். நடப்பு சீசனில் 14 போட்டியில் விளையாடியுள்ள அவர் 502 ரன்கள் விளாசியுள்ளார். தற்போது சதம் விளாசி செம பார்மில் குயின்டன் டி காக் உள்ளார். குயின்டன் டி காக்கை எவ்வளவு விரைவில் வீழ்த்துகிறார்களோ, அவ்வளவு நல்லது ஆர்சிபி அணிக்கு..

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஆர்சிபி அணியின் முக்கிய போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக். 14 போட்டியில் விளையாடி 287 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 191 ஆகும். இருப்பினும் பிளே ஆப் சுற்றில் தினேஷ் கார்த்திக் 15 போட்டியில் விளையாடி 246 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். குர்னல் பாண்டியா பந்துவீச்சில் கார்த்திக் 28 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் அடித்து 2 முறை ஆட்டமிழந்து இருக்கிறார்

டுபிளஸிஸ்

டுபிளஸிஸ்

ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்படும் டுபிளஸிஸ், பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி கலக்கிய அனுபவம் உடையவர். பெரிய போட்டிகளில் ரன் குவிக்க கூடியவர். நடப்பு சீசனில் 443 ரன்கள் அடித்துள்ள டுபிளஸிஸ் இன்று எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் ஆர்சிபி அணியின் வெற்றி இருக்கும். இதனால் டுபளிஸிஸ் 20 ஓவர் வரை களத்தில் நின்று விளையாட வேண்டும்.

விராட் கோலி

விராட் கோலி

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி முக்கிய கட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார். எனினும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சீசனில் 309 ரன்களை குவித்த அவர் 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார். இதனால் கோலி மீண்டும் அதிவேக அரைசதம் அடித்து, பெங்களூருக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Eliminator – 5 Players who can Win the Game for their respective teams ஐபிஎல் எலிமினேட்டர் - ஆட்டத்தையே மாற்றக் கூடிய 5 வீரர்கள்.. இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வாய்ப்பு
Story first published: Wednesday, May 25, 2022, 12:34 [IST]
Other articles published on May 25, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X