தன்னலமாக ஆடினாரா கேஎல் ராகுல்.. ரசிகர்கள் கடும் பாய்ச்சல்.. இந்திய அணிக்கு தேவையில்லை என கருத்து

கொல்கத்தா: ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியிடம் லக்னோ அணி தோற்றதுக்கு கேஎல் ராகுல் தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தொடர்ந்து 5 முறை ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ள கேஎல் ராகுல், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்.

இதன் மூலம் டி20 உலக கோப்பை போன்ற தொடரில் ராகுலுக்கு தான் தொடக்க வீரர் என்ற பொறப்பு வழங்கப்பட்டது.

எதிர்பார்தத ரசிகர்கள்

எதிர்பார்தத ரசிகர்கள்

ஆனால், கேஎல் ராகுல் மீது தற்போது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ரன்களை அடித்த ராகுல், டி20 உலககோப்பையின் போது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இம்முறை நல்ல பார்மில் இருந்த ராகுல், 208 ரன்கள் என்ற இலக்கை வெற்றிக்கரமாக துரத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

43 பந்தில் அரைசதம்

43 பந்தில் அரைசதம்

ஆனால், ராகுல் வழக்கம் போல் மெதுவாக ரன்களை சேர்த்து ரசிகர்களை வெறுப்படைய செய்தார். 200 ரன்களுக்கு மேல் இலக்கு இருக்கும் போது தொடக்க வீரர்கள் தான் அதிரடியாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் ராகுல் 43 பந்துகளில் தான் அரைசதமே அடித்தார். ஒருவேலை ராகுல் இதனை ஒருநாள் போட்டி என நினைத்துவிட்டார் போலும். சூழலுக்கு ஏற்ப கேப்டன்கள் யுத்தியை மாற்றி விளையாட வேண்டும்.

ராகுல் Vs பட்டிடார்

ராகுல் Vs பட்டிடார்

ஆனால் ராகுல் ஆங்கர் ரோல் மட்டும் தான் செய்வேன் என்று தனது தனிப்பட்ட ஸ்கோரை மட்டும் உயர்த்தி, முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்து லக்னோ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் கேஎல் ராகுல். கேஎல் ராகுலுக்கு பெரிய ஷாட்களை ஆட தெரியும். அதனை கடைசி கட்டத்தில் செய்யாமல், கொஞ்சம் முன்பாகவே அடித்து ஆடி இருக்கலாம். பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசி இருந்தார். ஆனால் ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

சிறந்த பேட்ஸ்மேன் யார்?

சிறந்த பேட்ஸ்மேன் யார்?

இதனால் அணி எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நான் 60 ரன்கள் அடித்துவிட்டு ஆட்டமிழந்து விடுவேன் என்று ராகுல் நினைத்துவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிறந்த வீரர் என்பவர் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை பெற்று தருவதே தவிர, 40 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழப்பது அல்ல. இதனால் ராகுலை டி20 இந்திய அணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிரடியாக ஆடக் கூடிய தொடக்க வீரரை கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Eliminator – Fans criticising KL Rahul slow start in the front vs RCB தன்னலமாக ஆடினாரா கேஎல் ராகுல்.. ரசிகர்கள் கடும் பாய்ச்சல்.. இந்திய அணிக்கு தேவையில்லை என கருத்து
Story first published: Thursday, May 26, 2022, 10:39 [IST]
Other articles published on May 26, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X