For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர்களுக்கு தான் கோப்பையா..? ஐபிஎல் இறுதிப்போட்டி.. ஆதாரங்களுடன் கூறும் கணிப்புகள் - முழு விவரம்!

அகமதாபாத்: ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு மோதுகின்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, பாக் போட்டி, உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு ஐபிஎல் பைனலுக்கு தான் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன என்பதை தற்போது காணலாம்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமாஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா

பலம், பலவீனம்

பலம், பலவீனம்

குஜராத் அணியை பொறுத்தவரை முதல் குவாலிபையரில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றதால், 4 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது, சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ராஜஸ்தான் அணி வெள்ளிக்கிழமை தான் போட்டியில் விளையாடிய நிலையில், உடனடியாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் அணியின் பிளஸ்

குஜராத் அணியின் பிளஸ்

குஜராத் அணி பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. ராஜஸ்தான் அணியோ பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பட்டாசு தெறிக்கும். குஜராத் அணி வீரர் முகமது ஷமி நடப்பு சீசனில பவர்பிளேவில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஷமி குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டு எடுத்திருக்கும் போட்டிகளில் 12க்கு 11 முறை குஜராத் அணி வென்று இருக்கிறது.

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பலமாக பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகியோர் காணப்படுகின்றனர். பந்துவீச்சில் சாஹல் மற்றும் அஸ்வின் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி தருவார்கள். முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவர் வீசிய பிரசித் கிருஷ்ணா 3 சிக்சர்களை விட்டு கொடுத்தார். ஆனால் குவாலிபையர் 2வில் பிரசித் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ராஜஸ்தான் Vs குஜராத்

ராஜஸ்தான் Vs குஜராத்

பவுல்ட், மெக்காயும் குஜராத்துக்கு நெருக்கடி தருவார்கள். குஜராத் அணி பேட்டிங் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரை சுழன்றே உள்ளது. மேத்தீவ் வேட், சாஹா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்று ரஷித் கானால் ராஜஸ்தான் வீரர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இரண்டிலும் குஜராத் அணி தான் வென்று இருக்கிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

குஜராத் அணி

  1. சாஹா
  2. சுப்மான் கில்,
  3. மேத்தீவ் வாட்,
  4. ஹர்திக் பாண்டியா,
  5. டேவிட் மில்லர்.
  6. ராகுல் திவாட்டியா,
  7. ரஷித் கான்,
  8. சாய் கிஷோர்,
  9. முகமது ஷமி,
  10. லோகி பெகுர்சன்
  11. யாஷ் தயல்

ராஜஸ்தான் அணி

  1. ஜாஸ் பட்லர்,
  2. ஜெய்ண்வால்,
  3. சஞ்சு சாம்சன்,
  4. படிக்கல்
  5. ஷிம்ரன் ஹேட்மயர்
  6. ரியான் பராக்
  7. அஸ்வின்
  8. டிரெண்ட் பவுல்ட்
  9. மெக்காய்
  10. சாஹல்
  11. பிரசித் கிருஷ்ணா
Story first published: Sunday, May 29, 2022, 20:05 [IST]
Other articles published on May 29, 2022
English summary
IPL Final 2022 – Rajasthan, Gujarat fighting each other- Preview and Playing xi ஐபிஎல் 2022 இறுதி போட்டி - ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை.. யாருக்கு வெற்றி வாய்ப்பு..பிளேயிங் லெவன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X