For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரருக்கு அதிர்ச்சி அளித்த ஹர்திக்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. அணியிலிருந்து அதிரடி நீக்கம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதுகின்றன.

நவி மும்பையில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் தோல்வியை தழுவியதால் ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இந்த ஆட்டத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார்.

IPL- Gujarat Titans shocking move to leave sai sudharsan

குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன், குஜராத் அணி தடுமாறிய போது களத்துக்கு வந்து 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

இதனால் பலரும் இந்த தங்கத்தை ஏன் இவ்வளவு நாள் மறைத்து வைத்து இருந்தீர்கள் என கேட்க தொடங்கினர். குஜராத் அணியில் தொடக்கம் சரி இல்லாததால், சாய் சுதர்சன் போன்ற வீரர் அணிக்கு முக்கியம் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். நீண்ட நாளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அறிமுகமானது மகிழ்ச்சி அளித்ததாகவும் சாய் சுதர்சன் கூறி இருந்தார்.

இதே போன்று 2வது ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் 3வது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் சாய் சுதர்சனுக்காக ரசிகர்கள் கவலை அடைந்தனர். தவறான முடிவை ஹர்திக் எடுத்துள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த ஆட்டத்தில் விஜய் சங்கர் அடித்தால் மட்டுமே ஹர்திக்கின் தலை தப்பும்.

Story first published: Thursday, April 14, 2022, 20:20 [IST]
Other articles published on Apr 14, 2022
English summary
IPL- Gujarat Titans shocking move to leave sai sudharsan தமிழக வீரருக்கு அதிர்ச்சி அளித்த ஹர்திக்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. அணியிலிருந்து அதிரடி நீக்கம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X