
ஒன்றரை கோடி ரூபாய்
வில்லியம்சன் ,நிக்கோலஸ் பூரான் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் உள்ளிட்ட 21 வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த பிரிவாக ஒன்றரை கோடி ரூபாய் பட்டியலில் சில வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் .

ஒரு கோடி ரூபாய் பட்டியல்
இந்தப் பட்டியலிலும் ஒரு இந்தியர் கூட இல்லை. ஆஸ்திரேலிய வீரர் செம் ஆபாட், ரெய்லி மெர்டித், ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, டேவிட் மாலன், ஜேசன் ராய் ,ருத்தர் போர்டு,ஷகிபுல் ஹசன் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ஒன்றரை கோடி என நிர்ணித்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு வீரர்கள்
இதன் அடுத்தபடியாக ஒரு கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் தான் இந்திய வீரர்கள் மூன்று பேர் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் மாயங் அகர்வால், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, முஹம்மது நபி, முஜிபுர் ரஹ்மான், மோய்சஸ் ஹென்ரிகியூஸ், ஜோ ரூட் ,மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் குப்தில், கெயில் ஜெமிசன், டேரல் மிச்சல், ஹென்ரிச் கிளாசன், டேவிட் வீசி , தப்ரைஸ் சாம்சி, குசேல் பெரரா, ராஸ்டன் சேஸ், ஆகியோர் தங்களது பெயரை ஒரு கோடி ரூபாய் பட்டியலில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்திய வீரர்கள்
மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உனாட்கட் , இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரகானே ஆகியோர் தங்களது விலையை 50 லட்சம் ரூபாயாக குறைத்து இருக்கிறார்கள். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது அடிப்படை விலையை 75 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்.