ரூ. 2 கோடி அடிப்படை விலை வீரர்கள் பட்டியல்.. ஒரு இந்தியர் கூட இல்லாத சோகம்.. வீரர்கள் பட்டியல் இதோ

மும்பை : ஐபிஎல் மினி ஏலத்தில் 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 714 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

227 பேர் வெளிநாட்டு வீரர்கள், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 வீரர்களும் தென்னாப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து 33 வீரர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஒரு கோடி ரூபாய், 75 லட்சம் ரூபாய் ,50 லட்சம் ரூபாய் என பட்டியல் நீடிக்கிறது.

திரும்பிய நட்சத்திரங்கள்

திரும்பிய நட்சத்திரங்கள்

இதில் 21 வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்து தங்களது பெயரை கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஏலத்தில் பங்கேற்காத சாம்கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் தற்போது உள்ள மினி ஏலத்தில் பங்கேற்கிறார்கள். இவர்களுடைய அடிப்படை விலை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கேமரான் கிரீன் தனது அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.

2 கோடி ரூபாய் பட்டியல்

2 கோடி ரூபாய் பட்டியல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து நீக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயத்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் நாதன் குல்டர் நைல், டிராவிஸ் ஹெட், கிரிஸ் லின், இங்கிலாந்து வீரர் டாம் பேண்டன், கிறிஸ் ஜார்டன், டைமல் மில்ஸ், ஜெமி ஓவர் டன் , கிறிஸ் ஓவர்டன், டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆதில் ரசித் , இங்கிலாந்து வீரர் பீல் சால்ட், சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடம் மிலன் ஆகியோர் தங்களது விலையை 2 கோடியாக நிர்ணயித்துள்ளனர்.

 மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜெமி நீஷம், தென்னாப்பிரிக்க வீரர்கள் ரூசோவ், வெண்டர் டூசன், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ரஹானே, இஷாந்த சர்மா போன்ற எந்த இந்திய வீரர்களும் இல்லாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யலாம். ஏற்கனவே சில வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால் அதிகபட்சமாக 87 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிசிசிஐ கெடு

பிசிசிஐ கெடு

ஆனால் 991 பேர் தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள் இதனால் இந்த பட்டியலை மேலும் சுருக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும். தற்போது இந்த வீரர்கள் பட்டியலை 10 அணிகளுக்கும் பிசிசிஐ வழங்கும். இதில் ஐபிஎல் அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை ஏலம் மேடைக்கு கொண்டு வர ஒரு பட்டியலை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் பிசிசிஐக்கு திருப்பி வழங்க வேண்டும். அதன் பிறகு இறுதிப்பட்டியல் வெளியாகும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Mini auction - 21 Players registered their name with base price of 2 crores ரூ. 2 கோடி அடிப்படை விலை வீரர்கள் பட்டியல்.. ஒரு இந்தியர் கூட இல்லாத சோகம்.. வீரர்கள் பட்டியல் இதோ
Story first published: Thursday, December 1, 2022, 23:40 [IST]
Other articles published on Dec 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X