For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL ஏலத்தில் சிஎஸ்கே இன்ப அதிர்ச்சி..மிக்சர் சாப்பிடாமல் பாய்ந்த நிர்வாகிகள்.. அதிகரித்த பலம்

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏலம் தொடங்கியதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத விதமாக மாயங் அகர்வாலுக்கு ஏலம் கேட்டது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்ராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு , சேனாபதி என நான்கு தொடக்க வீரர்கள் இருக்கும் நிலையில் சென்னை ஏன் மாயங் அகர்வால் பின்னால் சென்றது என ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாயங் அகர்வாலுக்கு ஏழு கோடி ரூபாய் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் கேட்டதால் ஷாம் கரணை அவர்கள் எப்படி எடுப்பார்கள் என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்!

அகர்வால் பின்னால் சிஎஸ்கே

அகர்வால் பின்னால் சிஎஸ்கே

இந்த நிலையில் மாயங் அகர்வால் கையை விட்டு சென்ற நிலையில் அடுத்ததாக வந்த ரஹானேவை அடிப்படை விலையான ₹50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.சென்னை அணியின் யுக்தி வித்தியாசமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சனங்களும் ரசிகர்களும் கருதினர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் வீரர் புஜாராவை எடுத்த நிலையில் தற்போது ரகானேவை சிஎஸ்கே எடுத்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

ஹோல்டருக்கு குறி

ஹோல்டருக்கு குறி

அடுத்தாக வந்த கேமிரான் கிரனையும் சிஎஸ்கே ஏலம் கேட்கவில்லை. அதன் பிறகு சாம்கரனுக்கு சிஎஸ்கே ஏலம் கேட்டது. ஆனால் விலை அதிகமாக சென்றதால் பின்வாங்கியது. இதனால் சி எஸ் கே வின் திட்டம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பினர். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர்க்கு சி எஸ் கே ஏலம் கேட்டது. மூன்று பெரிய ஆல்ரவுண்டர்கள் இருக்கும் நிலையில் ஹோல்டர் பின்னால் செல்வது ஏன் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இதன்பிறகு தான் பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் கேட்டது.

ஒரு கட்டத்தில் விலை அதிகமாக சென்னை பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிவரை சென்று 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி பென் ஸ்டோர் தட்டி தூக்கியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் பயங்கரமாக அதிகரித்துள்ளது.

பலமான அணி

பலமான அணி

சென்னை போன்ற ஆடுகளங்களுக்கு பென் டோக்ஸின் பேட்டிங்கும் பந்துவீச்சும் சிறப்பாக எடுபடும் என கிரிக்கெட் விமர்சனங்கள் கருதுகின்றனர்.மும்பையும் தூக்கி நிலையில் இரண்டு உலக கோப்பையை வென்ற பென்டோக்ஸை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது சென்னை அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டும் தேவைப்படுகிறார்.

Story first published: Friday, December 23, 2022, 16:59 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
IPL mini auction - Strategy behind csk buying ben stokes and Rahane
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X