For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் சம்பளத்துக்கு சச்சின் தான் காரணம் தெரியுமா? மறைக்கப்பட்ட அந்த உண்மையை சொன்ன சேவாக்

Recommended Video

Sehwag on ipl salaries | சம்பளம் பற்றி மறைக்கப்பட்ட உண்மையை சொன்ன சேவாக்

டெல்லி:ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் பெற சச்சின், கும்ப்ளே, டிராவிட் ஆகியோரே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

டெல்லியில் சர்வதேச ப்ரீமியர் கபடி லீக் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி வீரர்களுக்கு நல்ல ஊதியம் தற்போது கிடைத்து வருகிறது. இதற்கு 17 ஆண்டுகளுக்கு முன் ஊதிய உயர்வுக்காக முன்னாள் வீரர்கள் நடத்திய போராட்டமே காரணம்.

குறைந்த பங்கு

குறைந்த பங்கு

தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே கிடைத்து வந்தது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

வருவாயில் 20%

வருவாயில் 20%

உதாரணமாக 100 வீரர்கள் இருப்பார்கள் என்று வைத்து கொண்டால், வருவாயில் 20 சதவீதத்தை பிரித்து.. பிசிசிஐ வீரர்களுக்குச் சரிசமமாக வழங்கும். இதுதான் நிரந்தர வருமானம்.

அதிக பங்குத்தொகை

அதிக பங்குத்தொகை

ஆனால், இந்த வருவாயில் பங்கு தொகையை 26 சதவீதமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் பிசிசிஐயிடம் போராடினோம். அதன் பின்னர், 26 சதவீதத்தை வழங்க பிசிசிஐ முன்வந்தது. இன்று கிரிக்கெட்டைக் காட்டிலும் எந்த விளையாட்டிலும் வீரர்களுக்கு இதுபோன்ற அதிகபட்ச பங்குத்தொகை கிடைக்காது.

சச்சின், டிராவிட்

சச்சின், டிராவிட்

2002-ம் ஆண்டு இந்த ஊதியப் பிரச்சினை, பங்கு தொகை பிரச்சினை எழுந்தது. இன்று இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி வீரர்கள் சிறந்த ஊதியம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு சச்சின், கும்ப்ளே, டிராவிட் உள்ளிட்ட சிலரின் போராட்டமும், விடாமுற்சியும் காரணம். அவர்கள் இல்லை என்றால் கோடிக்கணக்கில் ஊதியம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று பேசினார்.

Story first published: Wednesday, April 10, 2019, 17:37 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
IPL players are getting paid so well because Sachin, Dravid, and others says Virender Sehwag.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X