ஐபிஎல்: படு உஷாரான ஹர்திக் பாண்ட்யா.. டாஸில் இவ்வளவு தெளிவு.. ராஜஸ்தான் போட்டியில் அதிரடி மாற்றம்!

கொல்கத்தா: ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்காக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி இரண்டுமே ஒட்டுமொத்த பலத்தையும் களமிறக்கியுள்ளது.

இரு அணிகளும் மோதும் ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?

Recommended Video

IPL 2022 முதல் அணியாக Final சென்ற Gujarat Titans | #Cricket

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 உஷாரான பாண்ட்யா

உஷாரான பாண்ட்யா

போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தில் நன்கு மழை பெய்துள்ளது. நிறைய புற்களும் உள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். எனவே இங்கு முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் பிட்ச்-ன் தன்மை சற்று மாறும். அதிகபட்சமாக 170 ரன்கள் வரை மட்டுமே வரும் என்பதால், சுலபமாக விரட்டி விடலாம். இதே போல இதுபோன்ற முக்கிய போட்டியில் 2வதாக பவுலிங் வீசினால் அழுத்தத்தில் ஃபீல்டிங்கில் சொதப்பலாம். இதனால் உஷாரான பாண்ட்யா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கிய மாற்றத்தையும் ஹர்திக் பாண்ட்யா செய்துள்ளார். குஜராத் அணியின் முக்கிய பவுலராக லாக்கி ஃபெர்க்யூசன் இருந்து வந்தார். ஓய்வில் இருந்த அவரை கடைசி லீக் போட்டியில் ப்ளேயிங் 11-க்கு கொண்டு வந்திருந்தார். ஆனால் மீண்டும் இன்றைய முக்கிய போட்டியில் அவரை நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக அல்சாரி ஜோசஃப்-ஐ தேர்வு செய்துள்ளார்.

பலமான ராஜஸ்தான்

பலமான ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் டாஸ் தோற்பது அவர்களுக்கு புதிதல்ல லீக் சுற்றில் 14ல் 12 முறை டாஸ் தோற்றுள்ளனர். எனவே இதனை பொருட்படுத்தவில்லை. ப்ளேயிங் 11-ஐ பொறுத்தவரையில் லீக் சுற்றில் பயன்படுத்திய வீரர்களை வைத்தே மீண்டும் களமிறங்கியுள்ளார் சஞ்சு சாம்சன். இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

குஜராத் அணி: விருதிமான் சாஹா, சுப்மன் கில், மேத்யூவ் வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், யாஷ் தயால், அல்சாரி ஜோசஃப், முகமது ஷமி

ராஜஸ்தான் அணி : யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், அஸ்வின், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
GT vs RR IPl match ( குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளார்.
Story first published: Tuesday, May 24, 2022, 19:31 [IST]
Other articles published on May 24, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X